world

img

சென்னை கண் சொட்டு மருந்து மீது அமெரிக்க நோய் தடுப்பு அமைப்பு புகார்

சென்னையை சேர்ந்த குளோபல் பார்மா ஹெல்த் கேர் நிறுவனத்தின் கண் சொட்டு மருந்தினை பயன்படுத்தினால்  மிகவும் மோசமான பக்கவிளைவுகள் ஏற்படும் என அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது
   சென்னையை சேர்ந்த குளோபல் பார்மா ஹெல்த் கேர் நிறுவனத்தின் கண் சொட்டு மருந்தினை பயன்படுத்திய பலர் நிரந்தர பார்வை இழப்பு, இரத்தத்தில் தொர்று காரணமாக இறப்பு உள்ளிட்ட 55 விதமான பக்கவிளைவுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது
   இதனைத் தொடர்ந்து உணவு மற்றும் மருந்துகள் நிர்வாகத்துறை வெள்ளிக்கிழமை வெளியிட்ட எச்சரிக்கை அறிக்கையில், சில நிறுவனங்களின் பெயர்களை குறிப்பிட்டு அந்த நிருவனங்களின் மருந்துகளை பயன்படுத்துவதையும், வாங்குவதையும் பொதுமக்களும்,மருத்துவர்களும் நிறுத்தவேண்டும்.அசுத்தமான செயற்கையாக கண்ணீரை வரவழைக்கும் சொட்டுமருந்தை பயன்படுத்துவது கண்பாதிப்புகளை ஏற்படுத்தி பார்வையிழப்பு மற்றும் மரணத்திற்கு வழிவகுக்கிறது என்று தெரிவித்திருந்தது.
  இதனால் அமெரிக்க சந்தைகளில் இருந்து தனது மருந்துகளை திரும்ன பெற்றது குளோபல் பார்மா ஹெல்த் கேர் நிறுவனம்.
 

;