வாஷிங்டன்,மே.23- இந்தியாவில் தயாரிக்கப்படும் ஐபோன்களுக்கு வரி விதித்து ட்ரம்ப் திட்டவட்டம்.
இந்தியாவில் தயாரிக்கப்பட்டு அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் ஐபோன்களுக்கு 25% வரி விதிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
இந்தியாவிலோ அல்லது வேறு எந்த நாட்டிலோ ஐபோன்கள் தயாரிக்கப்பட்டு அமெரிக்காவுக்கு அனுப்புவதை தான் விரும்பவில்லை, ஐபோன்கள் அமெரிக்காவிலேயே, தயாரிக்கப்பட வேண்டும். அமெரிக்காவில் ஐபோன்களை தயாரிக்குமாறு ஆப்பிள் நிறுவன சி.இ.ஓ. டிம் குக்கிடம் ஏற்கனவே கூறினேன்” என டிரம்ப் தெரிவித்துள்ளார்.