world

img

ஹைதி ஜனாதிபதி கொலையில் 2 அமெரிக்கர்க்கு தொடர்பு...

போர்டோ பிரின்ஸ்:
கரீபியன் தீவு நாடான ஹைதி நாட்டின் ஜனாதிபதி  ஜோவனல் மோயிஸ் (வயது 53) புதன்கிழமையன்று  அவரது வீட்டில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டார். அவரது மனைவி மார்டின் மோயிஸ்என்பவரும் படுகாயமடைந் தார். இந்த கொலையில் சந்தேக குற்றவாளிகள் என கருதப்பட்ட 4 பேரை அந்த நாட்டு பாதுகாப்பு படையினர்  சுட் டுக்கொன்றனர். ஆனாலும் ஜனாதிபதி  கொலையில் தொடர்புடையவர்கள் குறித்து தீவிரமாக விசாரணை நடைபெற்று வந்தது.இந்நிலையில், 28 பேர்கொண்ட குழு இக்கொலையில் ஈடுபட்டுள்ளதாக அந்நாட்டு போலீஸ் உயர் அதிகாரி லியோன் சார்லஸ் தெரிவித்துள்ளார். 28 பேரில் 26 பேர் கொலம்பியாவையும், 2 பேர் ஹைதி தீவை பூர்வீகமாக கொண்ட அமெரிக்க நாட்டவர்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.அந்த 28 பேரில் 15 கொலம்பியர்கள், 2 அமெரிக்கர்கள் என மொத்தம் 17 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மேலும், 3 கொலம்பியர்களை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்று விட்டனர். மற்ற 8 பேர் தேடப்படுகின்றனர்.

;