world

img

பாலஸ்தீனர்கள் 10 பேர் படுகொலை

டெல் அவிவ், ஜன.30- பாலஸ்தீனப் பகுதிகளில் ஆக்கிரமிப்பு செய்துள்ள இஸ்ரேலிய ராணுவத்தின் வன்முறை வெறிச் செயல்கள் தொடர்கின்றன.  ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றான அல்குட்சில் உள்ள அல்-ராம் என்ற நகரில் பாது காப்புப் படையினரோடு ஏற்பட்ட மோதலில் கடுமையான காயமடைந்த யூசுப் முஹெய்சின் சிகிச்சை பலனளிக்காததால் உயிரிழந்தார். மேற்குக் கரையில் உள்ள பாலஸ்தீன நிர்வா கத்தின் சுகாதாரத்துறை இந்தத் தகவலை வெளி யிட்டிருக்கிறது. 22 வயதான யூசுப்பின் கொலை யால் மிக மோசமான நாளாக ஜனவரி 26 ஆம்  தேதி மாறியுள்ளது. அவர் தாக்கப்பட்ட அதே நாளில் தான் ஜெனின் நகரில் கொடூரமான தாக்குதல் நடைபெற்றது.

ஜனவரி 26 ஆம் தேதியன்று ஆயுதந் தாங்கிய வாகனங்களில் வந்த இஸ்ரேலிய ராணு வத்தினர் மேற்குக்கரையின் ஜெனின் நகரத்திற் குள்ளும், அருகிலுள்ள அகதிகள் முகாமிற் குள்ளும் புகுந்து கொலைவெறித் தாக்குதல் களை நடத்தினர். அதில் ஒன்பது பேர் படுகொலை செய்யப்பட்டார்கள். இந்தத் தாக்குதலின்போது, குறிபார்த்து சுடுவதற்கு பயிற்சி அளிக்கப்பட்ட ராணுவத்தினர், சுடுவதற்கு வசதியாக வீடு களின் மாடிகளில் அமர்ந்து கொண்டனர். படை வீரர்களைத் தடுக்க முயன்ற பாலஸ்தீன இளை ஞர்களை துப்பாக்கிகளால் சுட்டனர்.  இந்தத் தாக்குதலில் கொலையானவர் களின் எண்ணிக்கை ஒன்பது என்பதை பாலஸ்தீன நிர்வாகம் உறுதி செய்திருக்கிறது. கொல்லப்பட்டவர்களில் வயதான மூதாட்டியும் ஒருவராவார். மேலும் சிலர் உயிருக்குப் போராடிக்  கொண்டிருக்கிறார்கள். பாலஸ்தீன மக்கள் மத்தி யில் அச்சத்தை ஏற்படுத்துவதும், புதிய பகுதி களை ஆக்கிரமித்துக் கொள்வதும் இத்தகைய தாக்குதல்களின் நோக்கமாக உள்ளது. சர்வதேச சமூகத்தின் அமைதி இஸ்ரேலுக்கு சாதகமாக உள்ளது. ஐக்கிய நாடுகள் சபையில் தொடர்ந்து இஸ்ரேலிய ஆக்கிரமிப்புகளுக்கு எதிரான தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டாலும், அவை நடைமுறைக்கு வராமல் அமெரிக்கா பார்த்துக் கொள்கிறது.

இறுதி ஊர்வலம்

ஒன்பது பேர் கொல்லப்பட்ட நாளில், ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்ற இறுதி ஊர்வலம் நடைபெற்றது. சடலங்களை சுமந்து கொண்டு இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக்கு எதிரான முழக்கங்களோடு நிரம்பிய வீதிகளாகக் காட்சி யளித்தது. இஸ்ரேலிய முற்றுகைக்கு ஆளாகி யுள்ள மற்றொரு பாலஸ்தீனப் பகுதியான காசாத் திட்டிலும் ஒற்றுமையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. ஆக்கிரமிப்புப் படைகளுக்கு எதிரான முழக்கங்கள் இங்கும் எதிரொலித்தன.

காசா மீதும் தாக்குதல்

ஹமாஸ் அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள  காசாத் திட்டுப் பகுதி மீது ஜனவரி 27 ஆம் தேதி யன்று ஆளில்லா விமானங்கள் மூலமும், போர் விமானங்கள் மூலமும் தாக்குதல்கள் நடந்தன. இந்தத் தாக்குதல்களால் உயிரிழப்புகள் அல்லது சேதங்கள் ஏற்பட்டுள்ளதா என்பது பற்றிய விபரங்கள் வெளியாகவில்லை. ஆனால், வழக்கம்போலவே, காசாத் திட்டுப் பகுதியில் இருந்து இஸ்ரேல் மீது ராக்கெட்டுகள் ஏவப்பட்ட தாகச் சொல்லி இந்தத் தாக்குதலை இஸ்ரேலிய ராணுவம் நடத்தியுள்ளது.  இந்தத் தாக்குதல்கள் பற்றி விவாதிக்க ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் கூட்டத்தை உடனடியாகக் கூட்ட வேண்டும் என்று சீனா, பிரான்ஸ் மற்றும்  ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் கோரிக்கை  விடுத்துள்ளன. அப்பாவி மக்கள் மீதான தாக்கு தல்கள் மற்றும் சட்டவிரோத ஆக்கிரமிப்புகள் நிறுத்தப்பட வேண்டும் என்று பல்வேறு சமூக அமைப்புகள் கோரிக்கை வைத்துள்ளன.

ஜெனின் நகரம் மீது இஸ்ரேலிய ராணுவம் நடத்திய கொடூரத் தாக்குதல்களால், அந்நாட்டுடனான பாதுகாப்பு ஒருங்கிணைப்பை  நிறுத்திக் கொள்வதாக மேற்குக்கரையின் நிர்வாகப் பொறுப்பில் இருக்கும் பாலஸ்தீன நிர்வாகம் அறிவித்துள்ளது. முகமது அப்பாஸ் தலைமையிலான இந்த நிர்வாகத்தின் செய்தித்தொடர்பாளரான நபில் அபு ருடேனே கூறுகையில், “கையெழுத்திடப்பட்ட உடன்பாடுகளை சீர்குலைக்கும் வகையில் நடந்து கொள்வதாலும், எங்கள் மக்கள் மீது தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருவதாலும் இஸ்ரேலுடனான பாதுகாப்பு ஒருங்கிணைப்பை விலக்கிக் கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளார். இதற்கு முன்பாக 2020 ஆம் ஆண்டிலும் ஒருமுறை ஒருங்கிணைப்பை நிறுத்தி வைப்பதாக பாலஸ்தீன நிர்வாகம் அறிவித்தது. மேற்குக் கரைப்பகுதிகளில் சிலவற்றைத் தனதாக்கிக் கொள்ள இஸ்ரேல் திட்டமிட்டபோது அதற்கு எதிராக அந்த அறிவிப்பை வெளியிட்டார்கள். பின்னர் மீண்டும் ஒருங்கிணைப்பு தொடர்ந்தது.

 

 

;