பாகிஸ்தானில் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விழுந்ததில் 19 பேர் உயிரிழந்தனர்.
பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்திலிருந்து குவெட்டா நோக்கி 30க்கும் மேற்பட்ட பயணிகளுடன் புறப்பட்ட பேருந்து, சோப் மலைப்பாதையில் சென்றுகொண்டிருந்தபோது பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 19 பேர் உயிரிழந்தனர். மேலும் 11 பேர் படுகாயமடைந்தனர். உயிருடன் மீட்கப்பட்டவர்களில் 5 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.
இதுகுறித்து போலீசார் விசாரித்ததில், பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானது.
காயமடைந்த 11 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த மாதம் பலுசிஸ்தானில் மினிபஸ் ஒன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் 22 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், பிரதமர் ஷெஹபாஸ் ஷெரீப் மற்றும் பலுசிஸ்தான் முதல்வர் ஆகியோர் இந்த துயரமான விபத்து குறித்து வருத்தம் தெரிவித்ததோடு, இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தனது இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்தனர்.