சுரங்க நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த 3 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.
மியான்மர் நாட்டில் உலகின் மிகப்பெரிய சுரங்கங்கள் உள்ள நிலையில், இங்கு ஏராளமான விபத்துக்கள் நடந்து வருகின்றன. அந்த வகையில் மியான்மர் நாட்டில் பகந்த் என்ற இடத்தில் பச்சை மாணிக்க கற்களை வெட்டியெடுக்கும் சுரங்கத்தில் நேற்று 4 மணியளவில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் வேலைசெய்த 70க்கும் மேற்பட்டோரை காணவில்லை எனத் தகவல் வெளியாகி இருந்தது. அதனைதொடர்ந்து நிலச்சரிவில் காணாமல் போனவர்களை சுமார் 200 மீட்புக்குழுவினர் உடல்களை மீட்க தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த 3 பேரின் உடல்களை மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதில் மீட்கப்பட்ட 3 பேரின் உடல்களும் ஆண்கள் என தெரிய வருகிறது. அதனைதொடர்ந்து நிலச்சரிவில் சிக்கிய நபர்களை தேடுதல் மற்றும் மீட்கும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.