world

img

லெபனான் மீது இஸ்ரேல் கொடூரத் தாக்குதல்- ஹிஸ்புல்லா ட்ரோன் பிரிவு தலைவர் உயிரிழப்பு

லெபனான் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தொடர் தாக்குதலில் ஹிஸ்புல்லாக்களின் ட்ரோன் படைப் பிரிவு தலைவர் ஹுசைன் சிரோர் சுட்டுக் கொல்லப்பட்டதாக அந்த அமைப்பு உறுதிப்படுத்தியுள்ளது.

கடந்த திங்கள்கிழமை தொடங்கி இதுவரை இஸ்ரேல் தாக்குதலில் 700-க்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டதாக உறுதியான தகவல்களும் வெளியாகியுள்ளன.

கடந்த 2006-ஆம் ஆண்டுக்குப் பிறகு மிகப்பெரிய தாக்குதல் நடவடிக்கையாக இஸ்ரேல் ராணுவம் லெபனானின் தெற்கு பகுதி நகரங்கள் மீது குண்டு மழை பொழிந்தது.

லெபானானின் ஹெர்மல், பிப்லோஸ், பால்பெக் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஹிஸ்புல்லா அமைப்பினர் ஆயுதங்களை பதுக்கி வைத்துள்ளதை இஸ்ரேல் உளவுத்துறை கண்டறிந்ததையடுத்து, இந்த தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது என அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது.

லெபனான் அமைச்சரின் போர் நிறுத்தக் கோரிக்கை:

லெபனான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்தல்லா போ ஹபீப் ஐ.நா பொதுச் சபையில் நிகழ்த்திய உரையில், இஸ்ரேல் திட்டமிட்டு லெபனான் எல்லை கிராமங்களை அழித்து வருகிறது. அதில், இஸ்ரேல் ஆக்கிரமிப்பு அதிகரிப்பதே தற்போதைய மோதலுக்குக் காரணம். இங்கே இந்தத் தருணத்தில் நாங்கள் போர் நிறுத்தத்தை விரும்புகிறோம். லெபானானில் 21 நாள் போர் நிறுத்தத்திற்கான அமெரிக்கா மற்றும் பிரான்ஸுன் முன்மொழிவுகளை வரவேற்கிறோம் என்றார்.

போர் நிறுத்தத்திற்காக அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் முன்மொழிவுகளை இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சர் காட்ஸ் நிராகரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது..