world

img

ஜப்பான் நிலநிடுக்க உயிரிழப்பு 161ஆக உயர்வு!

கடந்த ஜனவரி 1 அன்று ஜப்பானில், தொடர்ச்சியான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 161-ஆக உயர்ந்துள்ளது.

காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 195 ஆக உள்ள நிலையில் 28,800 பேர் 404 அரசு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

சுமார் 23,800 வீடுகள் மின்சாரம் இல்லாமல் இருந்தன மற்றும் 66,400க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தண்ணீர் விநியோகம் இல்லாமல் இருந்தன.

7.5 ரிக்டர் அளவு கொண்ட சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் உட்பட, புத்தாண்டு தினத்தன்று மத்திய மாகாணமான இஷிகாவாவில் உள்ள நோட்டோ தீபகற்பத்தை உலுக்கியது, இதனால் கட்டிடங்கள் இடிந்து கிழக்கு ரஷ்யா வரை சுனாமி எச்சரிக்கையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.