world

img

காசா மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் - 10 பேர் உயிரிழப்பு

இஸ்ரேல், காசா பகுதியில் நடத்திய வான்வழி தாக்குதலில், 5 வயது குழந்தை உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 76 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையே பல ஆண்டுகளாக பிரச்சனை நிலவி வரும் நிலையில், இரு நாடுகளுக்கு இடையே அவ்வப்போது தாக்குதல் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு இஸ்ரேல் படைகள் மேற்கு கரை பகுதியில் பதுங்கி இருந்த ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவரை கைது செய்திருந்த நிலையில், நேற்று இரவு காசாவின் மத்திய பகுதியில் இஸ்ரேல் சரமாரியாக வான்வழி தாக்குதல்களை நடத்தியது. இதில் 5 வயது குழந்தை உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் 76 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் பாலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.