world

img

இந்தோனேசியாவில் இரவுநேர கேளிக்கை விடுதியில் தீ விபத்து – 19 பேர் பலி

இந்தோனேசியாவில் இரவுநேர கேளிக்கை விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 19 பேர் உயிரிழந்தனர்.

இந்தோனேசியா மேற்கு பப்புவா மாகாணத்தில் உள்ள இரவுநேர கொண்டாட்டத்தின்போது இரு தரப்பினருக்கு ஏற்பட்ட திடீர் மோதலில் 19 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் இன்று(செவ்வாய்கிழமை) தெரிவித்தனர்.

இதுகுறித்து மேற்கு பப்புவா காவல்துறையின் செய்தி தொடர்பாளர் ஆடம் எர்வினி தெரிவிக்கையில், திங்கள்கிழமை இரவு சோராங் நகரில் உள்ள கேளிக்கை விடுதியில் இரு தரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டது. தாக்குதலின்போது விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 19 பேர் பலியாகியுள்ளனர்.  

முன்னதாக சனிக்கிழமை இரவும் அதே இரு தரப்பினருக்கும் இடையே தவறான புரிதல் காரணமாக மோதல் ஏற்பட்டது. நாங்கள் அவர்களை அழைத்து சமாதானம் செய்தும் அவர்கள் இரவுவரை மோதலை தொடர்ந்தனர் என்று நகர காவல்துறை ஆய்வாளர் ஆரி நியோடோ செட்டியவான் தெரிவித்தார்.  

அதனைதொடர்ந்து மோதலுக்கு என்ன காரணம் என்றும், தீ வைக்கப்பட்டதா? அல்லது தற்செயலாக நடந்ததா? என்றும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.