world

img

தீக்கதிர் உலக செய்திகள்

இஸ்ரேல் ஜனாதிபதி விமானத்திற்கு  துருக்கி அனுமதி மறுப்பு

இஸ்ரேல் ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக் பய ணிக்க இருந்த விமானம் தங்கள்  வான் வெளியை பயன்படுத்தக் கூடாது என தெரி வித்துள்ளது துருக்கி அரசு. அஜர்பைஜானில் நடைபெறும் காலநிலை மாற்ற மாநாட்டில் கலந்து கொள்ள பயணிக்க இருந்த நிலையில் தங்கள் வான்வழியை பயன்படுத்தக்கூடாது என துருக்கி திட்டவட்டமாக மறுத்துவிட்டதாகவும் அதன் பிறகு பாதுகாப்பு காரணங்களுக்காக இஸ்ரேல் பயணத்தை ரத்து  செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆன்லைன் மோசடியால் திணறும்  நியூஸிலாந்து மக்கள் 

வளர்ந்து வரும் நவீன தொழில் நுட் பங்களை பயன்படுத்தி  உலகம் முழு வதும் ஆன்லைன் மோசடிக்கும்பல்கள் மக்களின் பணத்தை திருடும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இந்த ஆன்லைன் மோசடியால் லட்சக்கணக்கான நியூஸி லாந்து மக்கள் தங்கள் பணத்தை இழந் துள்ள அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள் ளது. 2023 ஆம் ஆண்டு மட்டும்  சுமார் 117.3 மில்லியன் டாலர்கள் வரை (989 கோடி ரூபாய்களுக்கும் அதிகம்) ஆன்லைன்திருட்டுக் கும்பல் கொள்ளையடித்துள்ளது.

ஊடக ஆலோசகர் படுகொலை: இஸ்ரேல் ராணுவம் பொறுப்பேற்பு 

ஹிஸ்புல்லா அமைப்பின்  ஊடக தொடர்புத்துறை தலைவர் முக மது அஃபீப் கொல்லப்பட்டதற்கு இஸ்ரேல் பொறுப்பேற்றுள்ளது. லெபனான் தலைநக ரான பெய்ரூட்டில் அடுக்குமாடி கட்டிடத்தின் மீது எந்த முன்னறிவிப்புமின்றி  இஸ்ரேல் குண்டுவீசியது. இந்த குண்டுவீச்சில் 4 பேர் கொல்லப்பட்டனர் என அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இவர்களில் ஹிஸ்புல்லா அமைப்பின் முன்னாள் தலைவரான ஹசன் நஸ்ரல்லாவின் ஊடக ஆலோசக ரான முகமத் அஃபீப்பும் ஒருவர் என தெரியவந்துள்ளது.