அபாய கட்டத்தை எட்டியது ஒமைக்ரான்
உலக சுகாதார மையம் எச்சரிக்கை
ஜெனீவா, டிச.29-
உலகம் முழுவதும் பல நாடுகளில் வேகமாக பரவி வரும் ஒமைக்ரான் தொற்று தற்போது அபாய கட்டத்தை எட்டியுள்ளதாக உலக சுகாதார மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த மாதம் தென்னாப்பிரிக்காவில் ஒமைக்ரான் என்ற உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. டெல்டா வைரசை காட்டிலும் வீரியம் மிக்க, இந்த வைரஸின் பரவும் தன்மை அதிகமாக உள்ளது. மேலும், தடுப்பூசிகளின் செயல்திறனை குறைக்கிறது என ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆனால், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் தற்போது கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறை கொண்டாட்டம் களைகட்டியுள்ளதால், ஒமைக்ரான் பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அமெரிக்கா, பிரிட்டனில் தினசரி கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது.
இந்நிலையில், மாறுபாடு அடைந்த ஒமைக்ரான் தொற்று பரவல் வேகம் அபாய கட்டத்தை எட்டியுள்ளது. டெல்டா வைரசை விட ஒமைக்ரான் பரவல் விகிதம் பல நாடுகளில் அகதிரித்துள்ளது என உலக சுகாதார மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. உதாரணமாக இந்தியாவில் 21 மாநிலங்களில் பரவிய ஒமைக்ரான் வைரஸ் இதுவரை 781 பேருக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால், உயிரிழப்புகள் குறைவாக இருக்கிறது என உலக நாடுகள் மெத்தனமாக இருக்க வேண்டாம், எனவும், இந்த ஒமைக்ரான் வைரஸ், தடுப்பூசியின் செயல்திறனை குறைப்பதால் கொரோனா தொற்றுக்கு ஆளாகி உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது என உலக மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.