world

img

“பிரான்ஸ் பிரதமர் மைக்கேல் பார்னியர்: நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி”

பாரீஸ், டிச.5- பிரான்ஸ் பிரதமர் மைக்கேல் பார்னிய ருக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக் கையில்லாத் தீர்மானத்தில் அவர் தோல்விய டைந்தார். இதனால் அவர் பிரதமர் பதவியை இழந்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்திற்கான நாடாளு மன்றத் தேர்தலில் பிரான்ஸ் உட்பட பல நாடு களில் தீவிர வலதுசாரிக் கட்சிகள் வெற்றி பெற்ற நிலையில், பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன் அந் நாட்டு நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு அழைப்பு விடுத் தார். இது மக்ரோனின் அரசியல் சூதாட்டம் என்ற விமர்சனங்கள் எழுந்தன.

தேர்தலில்:

Fஇடதுசாரிகளின் மக்கள் முன்னணி
F மக்ரோனின் மறுமலர்ச்சிக் கட்சி
F லீ பென் தலைமையிலான தேசிய பேரணி (தீவிர வலதுசாரிக் கட்சி)

ஆகியவற்றிற்கு இடையே மும்முனைப் போட்டி நிலவியது.

முதல் கட்ட வாக்குப்பதிவில் தேசிய பேர ணிக் கட்சி முன்னிலை வகித்தது. சமயோசிதமா கத் திட்டமிட்ட இடதுசாரிக் கூட்டணி மக்ரோ னின் மறுமலர்ச்சிக் கட்சியுடன் இணைந்து இரண்டாம் கட்ட வாக்குப்பதிவைச் சந்தித்தது. இதனால் தேர்தல் முடிவில் தேசிய பேரணிக் கட்சி மூன்றாம் இடத்திற்குத் தள்ளப்பட்டது. இடதுசாரிகள் அதிக இடங்களையும், மறு மலர்ச்சிக் கட்சி இரண்டாம் இடத்தையும் பிடித்தன.

யாரும் பெரும்பான்மை பெறாத நிலை யில் தேசிய ஆட்சி அமைக்கும் சூழல் உரு வானது. இதனால், நியாயமான முறையில் மக்கள் தீர்ப்பின் அடிப்படையிலும், அதிக இடங்களைப் பிடித்த இடதுசாரிகள் கூட்டணியி லிருந்து பிரதமரைத் தேர்வு செய்ய வேண்டும் என இடதுசாரிகள் வலியுறுத்தினர். ஆனால் மக்ரோன் இடதுசாரிகள் கையில் ஆட்சியைக் கொடுக்கவில்லை. தீவிர வலதுசாரிகளும் அமைச்சரவையில் இடதுசாரிகளுக்கு இடம் தரக்கூடாது என அழுத்தம் கொடுத்தனர்.

தேர்தல் முடிந்து 2 மாதங்கள் வரை ஆட்சி  அமைக்க அழைப்புக் கொடுக்காமல் மக்ரோன் இழுத்தடித்தார். பிறகு மைக்கேல் பார்னிய ரைப் பிரதமராக நியமித்தார்.

91 நாட்கள் மட்டுமே பிரதமராக இருந்த பார்னியர், இடதுசாரி, வலதுசாரிகளின் ஒப்பு தல் இல்லாமல், ஜனாதிபதி மக்ரோனின் ஆதர வுடன் பட்ஜெட்டை நிறைவேற்ற முயன்றதால் அவர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

இந்தத் தீர்மானத்தின் மீது வாக்களித்த 577 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 331  பேர் பார்னியர் அரசுக்கு எதிராக வாக்களித்துள் ளனர்.

பட்ஜெட்டில் என்ன உள்ளது

பார்னியர் கொண்டுவரும் பட்ஜெட்டில் நாட்டின் பட்ஜெட் பற்றாக்குறையை 5 சதவீத மாகக் குறைப்பதாக மக்கள் நலனுக்கு எதிரான ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன:

F அரசின் செலவுக் குறைப்பு என்ற பெயரில் மக்கள் நலத்திட்டங்களை வெட்டுவது
F ஓய்வூதியத்தைக் குறைப்பது
F60 பில்லியன் யூரோக்கள் ($63 பில்லியன்) வரை வரி உயர்வு

இதற்கு நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெற வில்லை எனவும், மக்ரோனின் ஆதரவுடன் மட்டும் அவர் நிறைவேற்றத் துணிந்ததாகவும் கூறப்படுகிறது.

பிரான்சுக்குப் புதிய சிக்கல்

பட்ஜெட் தாக்கலுக்கு முன்பே ஆட்சி வீழ்ந்த தால் பிரான்சுக்குப் புதிய நெருக்கடி உருவாகி யுள்ளது. இந்தப் பட்ஜெட் டிசம்பர் 21-க்குள் தாக்கல் செய்யப்பட வேண்டும். இல்லையென் றால் அரசாங்கத்தின் பல்வேறு துறைகள் நிதி யின்றி முடங்கிவிடும். இதனைத் தவிர்ப்பதற் காக “நிதித் தொடர்ச்சி சட்டத்தை” இயற்ற வேண்டிய கட்டாயம் தற்போது பிரான்ஸ் ஜனாதி பதிக்கு உருவாகியுள்ளது.

இது அரசாங்கம் முடங்காமல் இருக்க ஒரு தற்காலிக நடவடிக்கை மட்டுமே. இந்தச் சட்டம் அடுத்த ஒரு வருடத்திற்குப் புதிய பட்ஜெட் இன்றி அரசாங்கம் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கி றது. இச்சட்டம் மூலம் அரசு தொடர்ந்து வரி வசூலிப்பது, ஊதியம் வழங்குவது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளும்.

அதேபோல நாடாளுமன்றத் தேர்தல் முடிந்து 1 வருடம் ஆகாத காரணத்தால் 2025 ஜூன் மாதம் வரை புதிய நாடாளுமன்றத் தேர்த லை அந்நாட்டுச் சட்டத்தின்படி நடத்த இயலாது. இந்நிலையில் பிரான்சின் அரசியலில் அடுத்து என்ன நடக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.