world

img

மொபைலை முழுங்கிய இளைஞர் - நடந்தது என்ன ? 

ஐரோப்பா கண்டத்தில் உள்ள கொசோவா நாட்டை சேர்ந்த இளைஞர் ஒருவர் நோக்கியா 3310 மாடல் மொபைல் போனை முழுங்கியுள்ளார். தொடர்ந்து நான்கு நாட்களாக அவர் வயிற்றுனுள் இருந்த மொபைல் போனை சரியான நேர்த்தியில் அறுவை சிகிச்சை செய்து  வெளியே எடுத்து , இளைஞரின் உயிரையும் காப்பாற்றியுள்ளார் அந்நாட்டு மருத்துவர்  ஸ்கந்தர் டெல்ஜாக்கு .

மொபைல் போனை விழுங்கிய அந்த இளைஞர் கொசோவா நாட்டிலுள்ள பிரிஸ்டினா மாநிலத்தை சேர்ந்தவர் . இவரின் வயிற்றை சோதனை செய்த மருத்துவர்கள், அந்த போன் ஜீரணிக்க முடியாத அளவுக்கு பெரியது என்றும், தீங்கு விளைவிக்கும் ரசாயனங்களை கொண்ட பேட்டரி அவர் உயிரையும் கொள்ள வாய்ப்புள்ளதாகவும் கண்டறிந்தனர். 

மேலும், எண்டோஸ்கோப்பி மூலம் சோதனை செய்தபோது , அந்த மொபைல் போன் மூன்று பாகங்களாக பிரிந்துள்ளது என்பது தெரியவந்துள்ளது . இதனால் மேலும் பதற்றமடைந்த மருத்துவர்கள், போனை விட்டு தனியாக பிரிந்த பேட்டரி சிறிது நேரத்தில் வெடித்துவிட வாய்ப்புள்ளது  என்பதால் உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்தனர். அதன்படி, மிக நேர்த்தியான முறையில் அறுவை சிகிச்சை செய்து மூன்று பாகங்களாக பிரிந்த மொபைல் போனை வெளியே எடுத்தது மட்டுமின்றி அந்த இளைஞரின் உயிரையும் காப்பாற்றியுள்ளார் மருத்துவர் ஸ்கந்தர் டெல்ஜாக்கு . 

2000ஆம் ஆண்டில் வெளியான இந்த நோக்கியா 3310 மாடல் மொபைல் போனை,  செங்கல் என்று சிலர் கூறுவதும் உண்டு. 2014ஆம் ஆண்டு ஆய்வின்படி, நிறைய இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் இதே போல் இந்த மொபைல் போனை விழுங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.