ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து அணி படுதோல்வி அடைந்ததை அடுத்து இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாக இயக்குநர் ஆஷ்லி கைல்ஸ் பதவி விலகினார்.
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஆஷஸ் தொடரில் 4-0 என்ற கணக்கில் இங்கிலாந்து தோற்றது. இந்நிலையில் ஆஷஸ் தோல்விக்கு பிறகு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாக இயக்குநர் பதவிலிருந்து ஆஷ்லி கைல்ஸ் விலகியுள்ளார்.
அதனைதொடர்ந்து 3 ஆண்டுகளாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாக இயக்குனராக இருந்த ஆஷ்லி கைல்ஸ் விலகியதால், முன்னாள் டெஸ்ட் கேப்டன் ஆண்ட்ரூ ஸ்டராஸ் தற்காலிக இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த காலகட்டத்தில் இங்கிலாந்து அணி 50 ஓவர் உலகக்கோப்பைப் போட்டியில் சாம்பியன் ஆனது. மிகச்சிறந்த டி20 அணியாக விளங்குவதோடு டெஸ்ட் தரவரிசையில் 4 ஆம் இடத்திலும் நீடிக்கிறது. மேலும் இங்கிலாந்து ஆடவர் அணி யு-19 உலகக்கோப்பை போட்டியில் கடந்த 24 வருடங்களில் முதல்முறையாக இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.