லிஸ்பன்:
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு நாடுகள் தடுப்பூசியை வேகமாக பயன்படுத்தி வருகின்றன. ஆனால் இந்த தடுப்பூசி இன்னும் ஏழை நாடுகளுக்கு முழுதாக கிடைக்கவில்லை என உலக சுகாதார நிறுவனம் வருத்தம் தெரிவித்து உள்ளது.
போர்ச்சுக்கல் நாடு நடத்திய ஆன்-லைன் சுகாதார மாநாடு ஒன்றில் உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் டெட்ரோஸ் கேப்ரியேசஸ் பேசினார். அப்போது, ‘உலக அளவில் 100 கோடிக்கும் அதிகமான தடுப்பூசி டோஸ்கள் இதுவரை பயன்படுத்தப்பட்டு உள்ளன. இதில் 82 சதவீத டோஸ்கள் உயர், மேல் மற்றும் நடுத்தர வருவாய் நாடுகளில் பயன்படுத்தப்பட்டு உள்ளன. ஆனால் குறைவான வருவாய் கொண்ட ஏழை நாடுகளில் வெறும் 0.3 சதவீத டோஸ்களே போடப்பட்டு உள்ளன. இதுதான் உண்மை’ என்றார்.