health-and-wellness

img

ஒமைக்ரானின் 2 புதிய வகைகளை ஆராந்து வரும் உலக சுகாதார நிறுவனம் 

ஒமைக்ரான் கொரோனா தொற்றின் இரண்டு புதிய துணை வகைகளான BA.4 மற்றும் BA.5 தொற்றுகளின் தன்மை குறித்து ஆராய்ந்து வருவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலக சுகாதார நிறுவனம் BA.1 ஒமைக்ரானின் பிறழ்வுகளான  BA.4 மற்றும் BA.5 ஆகியவற்றையும், கண்காணிப்பு பட்டியலில் ஏற்கனவே உலகளவில் அதிகமாக பரவி வரும்  BA.1, BA.2, BA.1.1 மற்றும் BA.3 ஆகிய மாறுபாடுகளையும் கண்காணித்து வருகிறது.

இந்த வகைகளின் கூடுதல் மாறுபாடுகள் மற்றும் அவற்றின் தாக்கத்தைப் புரிந்து கொள்ள மேலும் ஆய்வு செய்யப்பட வேண்டியதன் காரணமாக இவற்றை கண்காணிக்கத் தொடங்கியுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

தற்போது உலகளவில் BA.2 வகை தொற்று அதிகமாக பரவுகிறது. ஆனால் இந்த வகை கடுமையான பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பில்லை என்று ஆய்வுகள் கூறுகின்றன. மேலும், BA.4 மற்றும் BA.5 வகை தொற்றுகள் உலகளவில் சிலருக்கு மட்டுமே பரவியுள்ளன. BA.4 வகை தொற்று தென்னாப்பிரிக்கா, டென்மார்க், போட்ஸ்வானா, ஸ்காட்லாந்து மற்றும் இங்கிலாந்தில் கண்டறியப்பட்டதாக இங்கிலாந்தின் சுகாதார பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. BA.5 வகை தொற்று தென்னாப்பிரிக்கா மற்றும் போட்ஸ்வானாவில் கண்டறியப்பட்டுள்ளது.