world

img

தீக்கதிர் உலக செய்திகள்

உக்ரைன் கனிம வளங்களை  அமெ.வுக்கு கொடுக்க வேண்டும்

உக்ரைன் போருக்கு நிதியுதவி அளித்ததற்காக அந்நாட்டின் கனிம வளங்களை அமெரிக்காவிற்கு கொடுக்க வேண்டும் என டிரம்ப் கூறியுள்ளார். மின்சார வாகனங்கள், கைபேசிகள் உள்ளிட்ட மின்ன ணு சாதனங்களுக்கான சக்தியை இயக்கமாக மாற்றும் காந்தங்கள் உள்ளிட்ட சில பொருட் களை உருவாக்கத் தேவைப்படும் 17 உலோகங் கள் உக்ரைனில் உள்ளன. உக்ரைனுக்கு பல நூறு பில்லியன் டாலர்கள் உதவி செய்துள்ள அமெரிக்கா தற்போது அந்நாட்டு கனிமங்களை கொள்ளையிடத் திட்டமிட்டுள்ளது.

5 ஆயிரம் பாலஸ்தீன குடும்பங்களை இரண்டு வாரத்தில் துரத்திய இஸ்ரேல் 

கடந்த இரண்டு வாரங்களில்  மேற்குக் கரையில் உள்ள ஜெனின் மற்றும் துல்கர்ம் அகதிகள் முகாம்களில் இருந்து 5,000 க்கும் மேற்பட்ட பாலஸ்தீன குடும்பங்க ளை  வலுக்கட்டாயமாக துரத்தியுள்ளது இஸ்ரேல் ராணுவம். ‘இரும்புச் சுவர்’ தேடுதல் வேட்டை என்ற பெயரில் மேற்குக் கரையில் தொடர்ந்து பாலஸ்தீனர்களை படுகொலை செய்து வருகின்றது. மேலும் பல நூறு பாலஸ்தீனர்களை சட்டவிரோதமாக கைது செய்து சிறையில் அடைத்து சித்ரவதை செய்து வருகின்றது. 

லத்தீன் அமெரிக்க நாடுகள்   கூட்டமைப்பு மெக்சிகோவிற்கு ஆதரவு 

லத்தீன் அமெரிக்க நாடுகள் கூட்டமைப்பின் உறுப்பு நாடுகள் அமெரிக்க  வரிக்கொள்கைக்கு எதிரான மெக்சிகோவின் நடவடிக்கைக்கு ஆத ரவு தெரிவித்துள்ளன. ஜனாதிபதி கிளாடியா ஷீன் பாம் அரசாங்கம் போதைப்பொருள் கடத்தல் கும்பல்களை ஆதரிக்கின்றது என அமெரிக்கா வைக்கும்  குற்றச்சாட்டிற்கு எந்த ஆதாரமும் இல்லை என அவை தெரிவித்துள்ளன. வன்முறைமற்றும்  போதைப்பொருள்  கடத்தல் பிரச்சனைக்கு வரலாற்று ரீதியான காரணமான அமெரிக்கா தனது குற்றத்தை ஏற்றுக்கொள்ளாமல் மெக்சிகோவை குற்றவாளியாக்க முயற்சிக்கின்றது எனவும் குற்றம்சாட்டியுள்ளனர்.

விமான விபத்தில் பலியானோரின் உடல்கள் மீட்பு 

அமெரிக்காவில் பயணிகள் விமானமும் ராணுவ ஹெலிகாப்டரும் மோதிய விபத்தில் பலியான 67 நபர்களின் உடல்களும் மீட்கப்பட்டு விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அமெரிக்காவில் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத மிக மோசமான விமான  விபத்து என தெரிவிக்கப்பட்டுள்ளது. 67 உடல்களில் ஒரு உடல் மட்டும் அடையாளம் காணப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. பன்முகத் தன்மையுடன் அனைவரையும் பணியமர்த்துவதே இந்த விபத்தின் காரணம் என டிரம்ப் இனவெறியைக் கிளப்பி வருகிறார்.

இஸ்ரேலால் பாதிக்கப்பட்ட லெபனானுக்கு கத்தார் உதவும்

இஸ்ரேலின் ஆக்கிரமிப்பால் பாதிப்பிற்கு உள் ளான தெற்கு லெபனானை  மறுசீரமைக்கும் பணிக்கு தனது நாடு உதவும் என கத்தார் தெரி வித்துள்ளது. மேலும் லெபனான் எல்லைக்குள் இருந்து இஸ்ரேல் வெளியேற வேண்டும் எனவும் அதன் ஆக்கிரமிப்பை கைவிட வேண்டும் எனவும்  வலியுறுத்தப்பட்டுள்ளது. லெபனானின் இறை யாண்மையை நிலைநாட்ட ஐ.நா. பாதுகாப்பு கவுன் சில் தீர்மானம் 1701ஐ அமல்படுத்த வேண்டியதன் அவசியத்தை உணர்த்த லெபனான் ராணுவத்திற்கு தொடர்ந்து உதவ உள்ளதாகவும் கத்தார் பிரதமர் முகமது பின் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.