நாசா விஞ்ஞானிகள் விண்வெளி வரலாற்றில் முதல் முறையாக செவ்வாய் கிரகத்தில் ஒரு ஹெலிகாப்டரை தரை இறக்க ஏற்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளனர். ஏற்கனவே பல சக்கர ரோவர்களை இயக்கியிருக்கும் நாசா தற்போது சிறியரக ஹெலிகாப்டரை பறக்கவிட உள்ளது. இன்ஜெனியூனிட்டி(ingenuity) எனப் பெயரிடப்பட்டுள்ள அந்த ஹெலிகாப்டர் 1.8 கிலோ எடை கொண்டது. இந்த ஹெலிகாப்டரை சுமந்து செல்லும் பெர்சிவரென்ஸ் ரோவர் விண்கலம் ஹெலிகாப்டரை தரையிறக்க உள்ளது.
இந்த விண்கலத்தை நாசா ஏப்ரல் 11-ம் தேதி ஏவ ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சுமார் 293 மில்லியன் மைல் தூரம் பயணம் செய்ய உள்ளது. பூமியின் புவியீர்ப்பு விசையுடன் ஒப்பிடும் போது செவ்வாயில் மூன்றில் ஒரு பங்கு புவியீர்ப்பு விசை மட்டுமே உள்ளது.எனவே செவ்வாய் கிரகத்தில் ஹெலிகாப்டரை பறக்க வைப்பது மிக கடினமான செயல். மேலும் அங்கு நிலவும் தட்பவெப்ப நிலையை சமாளிக்க இண்டர்னல் ஈடர்ஸ் internal heaters-ம் இருக்க வேண்டும். இந்த முயற்சி சாத்தியமானால் விண்வெளி துறையில் மேலும் ஒரு மையில் கல்லாக இருக்கும்