world

img

காலத்தை வென்றவர்கள் : சார்லி சாப்ளின் பிறந்தநாள்....

சார்லி சாப்ளின் 1889ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16ஆம் நாள் பிறந்தார். சாப்ளின் ஐந்து வயதிலேயே நடிக்கத்தொடங்கிவிட்டார். முதன் முதலில் 1894ஆம் ஆண்டில் மியூசிக் ஹாலில் தனது தாய்க்குப் பதிலாக ஒரு வேடத்தில் நடித்தார். “தி கிட்” திரைப்படத்தில் ஜாக்கி கூகனுடன் சாப்ளின் (1921) நடித்தபோது தயாரிப்பாளர் மாக்செனட், சாப்ளினின் திறமையைக் கவனித்து அவரது நிறுவனமான கீஸ்டோன் திரைப்பட நிறுவனத்தில் சேர்த்துக் கொண்டார். இவரது கிடுகிடு வளர்ச்சிக்குக் காரணமாக அமைந்தது அவர் தனக்கென்று உருவாக்கிக் கொண்ட நாடோடி வேடமும், நிறுவனத்தில் இவருக்கு இயக்கவும் புது படைப்புகள் படைக்கவும் கொடுக்கப்பட்ட உரிமையுமாகும். 

சாப்ளின் சினிமாவின் பல துறைகளில் கைதேர்ந்தவராகத் திகழ்ந்தார். 1952-ல் வெளிவந்த“லைம்லைட்” திரைப்படத்தில் நடன அமைப்பையும் 1928ல் “தி சர்க்கஸ்” படத்தின் தலைப்பு இசைஅமைப்பையும் இவரே செய்தார். இவர் இசையமைத்த பாடல்களில் பெரும் புகழ் பெற்றது ஸ்மைல்.இவரது முதல் டாக்கீஸ் 1940 ஆம் ஆண்டில்வெளியான “தி கிரேட் டிக்டேட்டர்” இது அடால்ஃப்ஹிட்லரையும் அவரது பாசிச கொள்கையையும் எதிர்த்து குரல் கொடுத்த படம். இப்படம் அமெரிக்காஇரண்டாம் உலகப் போரில் புகுவதற்கு ஒரு வருடம் முன்பு அங்கு வெளியிடப்பட்டது. இதில் சாப்ளின் இரு வேடங்கள் பூண்டிருந்தார் - ஹிட்லர் மற்றும் நாஜியர்களால் கொடுமையாக கொல்லப்படும் யூத இனத்தைச் சேர்ந்த ஒரு நாவிதன். சினிமா மீது மோகம் கொண்ட ஹிட்லர் இப்படத்தை இரு முறை பார்த்தார். போர் முடிந்த பிறகு,ஹோலோகாஸ்ட்டின் கொடுமை உலகிற்கு தெரியவந்த பிறகு சாப்ளின், இக்கொடுமைகள் எல்லாம் தெரிந்திருந்தால் ஹிட்லரையும், நாஜியர்களையும் கிண்டல் செய்திருக்க முடியாது என்றார்.சாப்ளினின் அரசியல் சிந்தனைகள் இடதுசார்புடையதாகக் கருதப்படுகிறது. இதனையே இவரதுதிரைப்படங்கள், முக்கியமாக “மாடர்ன் டைம்ஸ்” பிரதிபலித்தன. இப்படம் பாட்டாளிகள் மற்றும் ஏழைகளின் கவலைக்கிடமான நிலைமையைச் சித்தரித்தது. “மெக்கார்த்திச காலங்களில்” இவர்அமெரிக்க கொள்கைகளுக்குப் புறம்பான நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும், கம்யூனிஸ்ட்-எனவும் சந்தேகிக்கப்பட்டார்; சாப்ளினின் வெற்றிகள் அனைத்துமே அமெரிக்காவில் அமைந்தாலும்,அவர் பிரிட்டிஷ் குடியுரிமையினையே நீட்டித்தார்.

1952 ஆம் ஆண்டில் சாப்ளின் இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டார். அப்போதுஇதனைத் தெரிந்துகொண்ட ஹூவர் சாப்ளின் அமெரிக்கா திரும்பும் அனுமதிச் சீட்டை ரத்துசெய்யப்பட்டது. ஆதலால் அவர் ஐரோப்பாவிலேயே தங்கும்படி நேர்ந்தது. இவர் 1972 ஆம் ஆண்டில் சிறிது காலம், தனக்கு அளிக்கப்பட்ட கௌரவஆஸ்கார் விருதைப் பெறுவதற்காக அமெரிக்காதிரும்பினார். சாப்ளின் நல்ல சதுரங்க ஆட்டக்காரர்.இதனை பிரபல ஆட்டக்காரர் சாமி ரிஷவெஸ்கியிடம் பயின்றார்.

பெரணமல்லூர் சேகரன்