world

img

அமெரிக்கா : ஹெலிகாப்டர் விபத்தில் 5 பேர் பலி

அமெரிக்காவில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழ்ந்துள்ளனர்.
அமெரிக்கா அலாஸ்கா மாநிலத்தில் , நிக்கிளேசியர் பகுதியில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இதில் 5 பேர் உயிரிழந்த நிலையில், ஒருவர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஹெலிகாப்டர் தொடர்பு  துண்டிக்கப்பட்டதாகவும், நிக்கிளேசியர் பகுதியில் விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என அலஸ்கா மாகாண மீட்பு குழுவினருக்கு தகவல் கிடைத்துள்ளது.. இதனை தொடர்ந்து, குறிப்பிட்ட இடத்திற்கு மீட்புகுழுவினர் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். 
படுகாயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். ஹெலிகாப்டர் விபத்துக்கான குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.