world

img

தீக்கதிர் உலக செய்திகள்

அமெ. ரிசர்வ் வங்கி ஆளுநர்  லிசா குக் திடீர் பணிநீக்கம்

அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் லிசா குக்கை டிரம்ப் திடீரென பணி நீக்கம் செய்து அறிவித் துள்ளார். மத்திய வங்கி யின் வட்டி விகிதங்க ளைக் குறைக்க வேண் டும் என டிரம்ப் அழுத்தம் கொடுத்து வந்த நிலை யில் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார் என கூறப் படுகிறது. லிசா குக் மீது நீதிமன்ற விசாரணை உள்ளது.  இதுவே அவரை பணி நீக்கம் செய்வதற்கு “போதுமான காரணம்” என்று தனது பதிவில் டிரம்ப் குறிப்பிட்டிருந்தார்.

வடகொரிய ஜனாதிபதியை  சந்திக்க விரும்பும் டிரம்ப்  

அமெரிக்க ஜனாதி பதி டிரம்ப் வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன்னை இந்த ஆண்டு   சந்திக்க விரும்பு வதாக தெரிவித்துள் ளார். தென் கொரியா வின் புதிய ஜனாதிபதி லீ ஜே மியுங் உடன் பேச்சுவார்த்தை நடத்திய போது இதனை தெரிவித்துள்ளார். கிம் ஜாங் உன் பெயரை நேரடியாக குறிப்பிடாத அவர், அவருடன் நான் மிகவும் நன்றாகப் பழகுகிறேன். அவருக்கு ஒரு நாடு உள்ளது; அதற்கு மிகப் பெரிய ஆற்றல் உள்ளது எனவும் புகழ்ந்துள்ளார். டிரம்ப் ஜனாதிபதியாக இருந்த போது 3 முறை கிம்மை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.