world

img

அமெரிக்கா: வெளிநாட்டினர் பணி உரிமம் தானாக புதுப்பிப்பது நிறுத்தம்!

அமெரிக்காவில் வெளிநாட்டினர் பணியாற்ற வழங்கப்படும் உரிமம், தானாக புதுப்பிக்கும் நடைமுறை இன்று முதல் நிறுத்தப்படுவதாக அந்நாட்டின் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை (DHS) அறிவித்துள்ளது.
இது தொடர்பாக உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், அக்டோபர் 30 அன்று முதல், வெளிநாட்டினர்களின் பணி உரிம புதுப்பிப்பு தானாக புதுப்பிக்கப்படாது. 
வெளிநாட்டினர் தங்கள் பணி உரிமத்தை புதுப்பிப்பதற்கு முன்பு, முழுமையான மறு ஆய்வுக்கு உட்படுத்தப்படுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விதிமுறையில் ஒரு சில விதிவிலக்குகள் உள்ளதாகவும், நாட்டின் சட்டம் மற்றும் பெடரல் பதிவுத் துறையால் உரிமம் பெற்றவர்களுக்கு மட்டும் விதிவிலக்கு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.