world

img

சிறுமியை சுட்டுக் கொன்ற அமெரிக்க போலீஸ்

 

அமெரிக்காவில் 14 வயது சிறுமியை அந்நாட்டு போலீசார் சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் மாகாணத்தைச் சேர்ந்தவர் வாலண்டினா ஒரிலேன்னா. சிலி நாட்டைச் பூர்வீகமாக சேர்ந்த இவரது குடும்பத்தார் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வசித்து வந்தனர். இந்நிலையில் வாலண்டினா ஒரிலேன்னா கடந்த வாரம் அருகிலுள்ள வணிக வளாகத்திற்கு சென்று தனக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டிருந்துள்ளார். அப்போது, அந்த வணிக வளாத்திற்குள் நுழைந்த இளைஞர் ஒருவர் அங்கிருக்கும் பெண்களிடம் முறைகேடாக நடந்து கொண்டுள்ளார்.

இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் கிடைத்த நிலையில், அங்கு வந்த போலீசார் தீடீரென கண்மூடித்தனமாக துப்பாக்கிக் சூடு நடத்தினர். இதில் ஏதும் அறியாத அப்பாவி சிறுமியான வாலண்டினா ஒரிலேன்னா மீது குண்டு துளைத்து அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் அந்நாட்டில் பெரும் சோகத்தையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையே, தன் மகளிடம் முன்பு ஒருமுறை நாம் நமது சொந்த நாட்டிற்கே சென்றுவிடலாமா என கேட்டபோது, அமெரிக்கா தான் உலகின் பாதுகாப்பான நாடு என எனது மகள் பதிலளித்தாள். ஆனால், தற்போது அந்நாட்டு போலீசாராலேயே அப்பாவியான எனது மகள் கொல்லப்பட்டு விட்டாள் என அவரது தந்தை ஜுவான் பாப்லோ ஓரெல்லானா வேதனையோடு தெரிவித்துள்ளார்.