ஆஸ்கர் விருதுகள் அறிவிப்பு 6 விருதுகளை அள்ளிய ‘ஒன் பேட்டில் ஆப்டர் அனதர்’ திரைப்படம்
திரையுலகின் உயரிய விருதான 98ஆவது ஆஸ்கர் விருது வழங்கும் விழா இந்திய நேரப்படி திங்களன்று அதிகாலை அமெரிக்கா வின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள டால்பி திரையரங்கில் வழங்கப்பட்டது. பிரபல நையாண்டிப் பேச்சாளர் கோனன் ஓ’பிரையன் 2ஆவது முறையாக ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்வை தொகுத்து வழங்கினார். ஒன் பேட்டில் ஆப்டர் அனதர் இந்த விருது வழங்கும் விழாவில் பால் தாமஸ் ஆண்டர்சன் இயக்கத்தில், பிரபல நடிகர் லியோனார்டோ டிகாப்ரி யோ நடிப்பில் வெளியான “ஒன் பேட்டில் ஆப்டர் அனதர் (One Battle After Another)” திரைப்படம் 6 ஆஸ்கர் விருதுகளை வென்றுள்ளது. இந்த திரைப்படம் 13 பிரிவுகளில் பரிந்துரைக் கப்பட்டது. இறுதியில் சிறந்த திரைப் படம் (தயாரிப்பாளர்கள் ஆடம் சோம்னர், சாரா மர்பி மற்றும் பால் தாமஸ் ஆண்டர்சன்), சிறந்த இயக்குநர் (பால் தாமஸ் ஆண்டர்சன்), சிறந்த துணை நடிகர் (சீன் பென்), சிறந்த தழுவல் திரைக்கதை (பால் தாமஸ் ஆண்டர்சன்), சிறந்த படத்தொகுப்பு (ஆண்டி ஜூர்கென்சன்), சிறந்த காஸ்டிங் (கசாண்ட்ரா குலுகண்டிஸ்) என 6 விருதுகளை வென்றது. இதற்கு முன்பு 11 முறை நாமினேஷன் ஆகி யிருந்த பால் தாமஸ் ஆண்டர்சன் 30 ஆண்டுகளுக்குப் பிறகு முதன் முறையாக ஆஸ்கர் விருதை வென்று பாராட்டைப் பெற்றுள்ளார். சின்னர்ஸுக்கு 4 விருதுகள் ராயன் கூக்லர் இயக்கத்தில் வெளி யான சின்னர்ஸ் திரைப்படம் 4 ஆஸ்கர் விருதுகளை வென்றது. வரலாற்றுச் சாதனையாக 16 பிரிவுகளில் இந்த திரைப்படம் பரிந்துரைக்கப்பட்டது. ஆனால், சிறந்த நடிகர் (மைக்கேல் பி. ஜோர்டன்), சிறந்த அசல் திரைக் கதை (ராயன் கூக்லர் - படத்தின் இயக்கு னர்), சிறந்த ஒளிப்பதிவு (டூரால்ட் அர்கா பாவ் - இந்தப் பிரிவில் ஆஸ்கர் வென்ற முதல் பெண்மணி என்ற வரலாற்றுச் சாதனை), சிறந்த பின்னணி இசை (லுட்விக் கோரான்சன்) என 4 ஆஸ்கர் விருதுகளை கைப்பற்றியது. பிராங்கண்ஸ்டைன் - 3 சின்னர்ஸுக்கு அடுத்தப்படியாக தொழில்நுட்பப் பிரிவுகளில் ஆதிக்கம் செலுத்தி பிராங்கண்ஸ்டைன் 3 விருது களை (தயாரிப்பு வடிவமைப்பு, மேக்கப் & சிகை அலங்காரம், ஆடை வடி வமைப்பு) வென்றது. மற்ற விருதுகள் சிறந்த நடிகை : ஜெஸ்ஸி பக்லி (ஆஸ்கர் வென்ற முதல் ஐரிஷ் நடிகை - ஹாம்னெட் திரைப்படம்) சிறந்த துணை நடிகை : ஏமி மேடிகன் (வேப்பன்ஸ்) சிறந்த அனிமேஷன் திரைப்படம்: கே-பாப் டெமோன் ஹன்டர்ஸ் திரைப்படம் சிறந்த அனிமேஷன் குறும்படம் : தி கேர்ள் ஹூ கிரைட் பியர்ல்ஸ் சிறந்த அசல் பாடல் : இஜா, மார்க் சோனன்பிளிக், டெடி பார்க் (கோல் டன் பாடல்-கே பாப் டெமோன் ஹன்டர்ஸ்) சிறந்த சர்வதேசத் திரைப்படம் : சென்டி மென்டல் வேல்யூ (நார்வே - ஆஸ்கர் வர லாற்றிலேயே ‘சிறந்த சர்வதேசத் திரைப் படம்’ பிரிவில் விருதை வெல்லும் முதல் நார்வே நாட்டுத் திரைப்படம்) சிறப்பு சத்தம் : எப்1 (5 பேருக்கு) சிறந்த ஆவணப்படம்: மிஸ்டர் நோபடி அகைன்ஸ்ட் புதின் (ரஷ்ய ஜனாதிபதி புதின் பற்றி) சிறந்த ஆவணக் குறும்படம் : ஆல் தி எம்டி ரூம்ஸ் சிறந்த விஷுவல் எபெக்ட்ஸ் : அவதார் - 3 சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு : பிராங்கண்ஸ்டைன் திரைப்படம் சிறந்த மேக்கப், சிகை அலங்காரம் : பிராங்கண்ஸ்டைன் சிறந்த ஆடை வடிவமைப்பு : கேட் ஹாவ்லி (பிராங்கண்ஸ்டைன்)
