world

img

தீக்கதிர் உலக செய்திகள்

ஐ.நா சிறப்பு அறிக்கையாளரின்  உரை ரத்துக்கு எதிர்ப்பு 

பாலஸ்தீனத்துக்கான ஐ.நா சிறப்பு அறிக்கை யாளர் பிரான்செஸ்கா அல்பானீஸ் பிப்.23 அன்று ஜெர்மனில் உள்ள லுத்விக்-மாக்சிமிலியன் பல்கலைக்கழகத்தில் (LMU) நடத்த இருந்த உரை நிகழ்வு ரத்து செய்யப்பட்டது. நிர்வாகத்தின் நடவடிக்கை இஸ்ரேலின் இனப்படுகொலைக்கு ஆதரவானது என கண்டனங்கள் எழுந்தன. இந்நிலையில் அந்த நிகழ்ச்சி நடத்தப்பட வேண்டும் என பல்கலைக்கழக பேராசிரியர்கள், ஆராய்ச்சியா ளர்கள், ஊழியர்கள் பல்கலைக்கழக நிர்வாகத்தை  மனு மூலம் வலியுறுத்தியுள்ளனர்.

போப் உடல் நிலை  சீராக உள்ளது 

போப் பிரான்சிஸ் உடல் நிலை சீராக உள்ளதாக வாடிகன் செய்தித் தொடர்பு அலுவலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. உடல் நிலை குறைபாட்டின் காரணமாக பிப்.14ண அன்று மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப் பட்டார். போப் நன்றாக ஓய்வு பெற்றார். உடல் நிலை நிலையாக உள்ளது. மருத்துவர்கள் கவனிப்பில் சிகிச்சை கொடுக்கப்பட்டு வருகின்றது. வாசிப்பதற்கும் ஓய்வெடுப்பதற்கும் தன்னுடைய நேரத்தை பயன்படுத்துகிறார் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைனுக்கு ராணுவம்:   பிரிட்டன் பிரதமர் அறிவிப்பு 

இங்கிலாந்து ஐரோப்பிய நாடுகளின் பாதுகாப்பை உறுதி செய்ய உக்ரைனுக்கு ராணுவத்தை அனுப்ப தயாராக உள்ளது என இங்கிலாந்து பிரதமர் ஸ்டார்மர் அறிவித்துள்ளார்.  உக்ரைன்-ரஷ்யா போர் அமைதியை நோக்கி செல்லக்கூடாது என இங்கிலாந்து பிரதமர் ஸ்டார்மர் நீண்டகாலமாக திட்டமிட்டு வருகின்றார். அமெரிக்காவிற்கு முன்பாகவே ரஷ்யாவிற்குள் நீண்டதூரம் சென்று தாக்கும் இங்கிலாந்தின் ஏவுகணைகளை பயன்படுத்த முதலில் அனுமதி கொடுத்ததும் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

 “டீப் சீக்” செயலியை தென்கொரியா தடை செய்தது

சீனாவின் “டீப் சீக்” செயலியை தென் கொ ரியா தடை செய்துள்ளது. குறைந்த விலையில் பயனர்களுக்கு கிடைப்பதால் டீப் சீக் செயற்கை நுண்ணறிவை உலகம் முழுவதும் கோடிக்கணக் கான மக்கள் பயன்படுத்த துவங்கியுள்ளனர். இந் நிலையில் இதுவரை ஆதிக்கம் செலுத்தி வந்த கூகுள், ஓபன் ஏஐ உள்ளிட்ட பல நிறுவனங்களில் செயற்கை நுண்ணறிவு நிறுவனங்களுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது. இந்நிலையில் டீப்சீக் பாதுகாப்பானதல்ல என ஆதாரமற்ற குற்றச்சாட்டை வைத்து தென் கொரியா தடை செய்துள்ளது.

மிக விரைவில் புடினை  சந்திக்க உள்ளேன் : டிரம்ப்

ரஷ்ய ஜனாதிபதி புடினை மிக விரைவில் சந்திக்கப் போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர விரும்புவதாக தெரிவித்த டிரம்ப், சந்திப்புக்களுக்கு “நேரம் நிர்ணயிக்கப்படவில்லை. அதுவும் மிக விரைவில் முடிவு செய்யப்படும்” என செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.சில நாட்களில் சவூதி அரேபியா தலைநகரில் ரஷ்ய அதிகாரிகளுடன் அமெரிக்க அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தை உள்ள நிலையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது.