இளம் வயதினர் இன்ஸ்டா கணக்குகளுக்கு புது கட்டுப்பாடு
இன்ஸ்டாகிராமில் இளம் வயதினர் பயன்படுத்தும் கணக்குகளுக்கு மெட்டா நிறுவனம் புதிய கட்டுப்பாடு களை விதித்துள்ளது. 13 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பெற்றோர் வழிகாட்டுதல் பரிந்துரை தர மதிப்பீட்டு விதிகளின்படி இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், பாலியல் உணர்வை தூண்டும் காட்சி கள், போதைப் பொருள், வன்முறை உணர்வை தூண்டும் காட்சிகள் இல்லாத வீடியோக்களை மட்டுமே இளம் வயதினர் காண முடி யும் என கூறப்படுகிறது.