ஐரோப்பாவைச் சூழும் புதிய எரிசக்தி நெருக்கடி
உக்ரைன் போரால் ஏற்பட்ட எரிசக்தி நெருக்கடியிலிருந்து ஐரோப்பிய நாடுகள் இன்னும் முழு மையாக மீளவில்லை. அதற்குள் ஈரானில் நடைபெற்று வரும் போர், ஐரோப்பாவிற்குப் புதிய தலைவலியை உருவாக்கியுள்ளது. ரஷ்யாவிற்கு மாற்றாக மற்ற நாடுகளிலிருந்து எரிசக்தியைப் பெற முயன்ற ஐரோப்பாவிற்கு, தற்போது மத்திய கிழக்கு நாடுகளிலும் போர் மூண்டிருப்பது பெரும் பின்னடைவாகும். இதனால் இயற்கை எரிவாயு மற்றும் மின்சாரக் கட்டணங்கள் ஐரோப்பிய நாடுகளில் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. இப்போது ஏற்பட்டுள்ள இந்த இரண்டாவது எரிசக்தி நெருக்கடி, ஐரோப்பாவின் தொழில்துறை உற்பத்தியையும் பொதுமக்களின் வாழ்வாதாரத்தையும் கடுமையாகப் பாதிக்கும் என்று அஞ்சப்படுகிறது. எரிசக்திப் பாதுகாப்பை உறுதி செய்ய ஐரோப்பிய நாடுகள் இப்போது தீவிரமான மாற்றுத் திட்டங்களை ஆலோசித்து வருகின்றன.
