ஜெனீவா:
ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசியை அவசர காலபயன்பாட்டிற்கு பயன்படுத்தலாம் என்று உலக சுகாதார நிறுவனம் அனுமதி அளித்துள்ளது.
உலக நாடுகளை மீண்டும் அச்சுறுத்தி வரும்கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில், இந்தியா உள்பட பல நாடுகள் தயாரித்துள்ள தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. இந்த நிலையில் ஜான்சன் அண்ட் ஜான்சன்நிறுவன கொரோனா தடுப்பு மருந்துக்கு உலகசுகாதார நிறுவனம் அவசர கால பயன்பாட் டிற்கு அனுமதியளித்துள்ளது. இந்த தடுப்பு மருந்தானது, ஒரே ஒரு டோஸ் போட்டால் போதுமானது என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.ஏற்கனவே ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவன தடுப்பு மருந்துக்கு ஐரோப்பிய ஒன்றியம் அனுமதி வழங்கியது. முதல்கட்டமாக ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவன தடுப்பு மருந்து100 மில்லியன் டோஸ்அமெரிக்கா ஆர்டர் செய்துள்ளது.