world

img

வாடகை விமானத்தில் வந்து பதவியேற்றார் ஜோ பைடன்.... விமானம் ஒதுக்காமல் டிரம்ப் அடாவடி...

வாஷிங்டன்:
அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக புதன்கிழமை ஜனாதிபதியாக பதவி ஏற்றார். அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளரான முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பைடன் வெற்றி பெற்றார்.

அதனை ஏற்றுக் கொள்ளாமல் டிரம்ப் ஆதரவாளர்கள் கடந்த 6 ஆம் தேதி அமெரிக்க நாடாளுமன்ற கட்டடத்துக்குள் நடைபெற்ற வன்முறைக்கு பிறகு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக்கப்பட்டன. ஜோ பைடன் பதவியேற்பு விழாவின்போது டிரம்ப் ஆதரவாளர்கள் கலவரத்தில் ஈடுபடலாம் என உளவுத்துறை எச்சரித்துள்ளதால் தலைநகர் வாஷிங்டனில் வரலாறு காணாதபாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட் டன. அதன் ஒரு பகுதியாக வாஷிங்டன் முழுவதும் அவசர நிலை அமல்படுத்தப்பட்டது.

இதையொட்டி வாஷிங்டன் முழுவதும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தேசிய பாதுகாப்பு வீரர்கள் குவிக்கப்பட்டனர்.இந்நிலையில் தனக்குப் பின் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்க இருக்கும் ஜோ பைடனை வெளிப்படையாக டொனால்டு டிரம்ப் அவமதித்துள்ளார். புதனன்றுபதவியேற்புக்காக ஜோ பைடன் வாஷிங்டன் டி.சி.க்கு வரவேண்டிய சூழலில், டிரம்ப் அரசாங்கம் அவருக்கு விமானத்தை ஒதுக்கவில்லை. இதனால் வேறு வழியின்றி, வாடகைக்கு தனியாக ஒரு விமானத்தை அமர்த்திக்கொண்டு பயணம் செய்தார் ஜோ பைடன். வாடகை விமானம் மூலம் வாஷிங்டன் வந்த ஜோ பைடன் அமெரிக்காவின் 46ஆவது ஜனாதிபதியாக புதனன்று பதவியேற்றுக் கொண்டார்.