world

img

தீக்கதிர் உலக செய்திகள்

லேபர் கட்சிக்கு எதிராக  ஜெர்மி கோர்பின் புதிய கட்சி 

இங்கிலாந்தின் லேபர் கட்சி தலைவராக இருந்த முற்போக்காளர் ஜெர்மி கோர்பினை வெளியேற்றி அக்கட்சியை தீவிர வலதுசாரிக் கட்சியாக கெய்ர் ஸ்டார்மர் மாற்றியுள்ளார். அவர் பிரதமராக பொறுப்பேற்ற பிறகு மனித குலத்துக்கு விரோதமான போர் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறார் என விமர்சனங்கள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் ஜெர்மி கோர்பின், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் ஜாரா சுல்தானாவுடன் இணைந்து ஒரு புதிய அரசியல் கட்சியை துவக்கத் திட்டமிட்டுள்ளார். 

எங்கள் அணுசக்தி கட்டமைப்பை  அழிக்க முடியாது: ஈரான்

ஈரானின் அணுசக்தி அமைப்பின் தலைவர் முகமது எஸ்லாமி, எங்கள் நாட்டின் அணு சக்தி திறன்களை வான்வழித் தாக்குதல்க ளால் அழித்து விட முடியாது என்று தெரி வித்துள்ளார். “எங்கள் அணு சக்தி ஆராய்ச்சித் திட்டம் உள்நாட்டு உற்பத்தியையும் வளர்ச்சியையும் மட்டுமே அடிப்படையாகக் கொண்டது. அதன் முன்னேற்றம் சீராகவும் தடையின்றியும் தொடரும். நீங்கள் வலுவாக இல்லாவிட்டால், உயிர்வாழ முடியாது” என்றும் அவர் உறுதியாகக் கூறியுள்ளார்.

உரையாடலும் ஒத்துழைப்பும் தான்  சரியான பாதை – சீனா 

லண்டனில் அமெரிக்க அதிகாரிகளுடன் நடந்த பேச்சுவார்த்தையை செயல் படுத்த இரு தரப்பினரும் தீவிரமாகச் செயல்பட்டு வருவதாக சீனா தெரிவித்துள்ளது. சீனாவிற்கு எதிரான நடவடிக்கைகளை நீக்க அமெரிக்கா நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது. மேலும் உரையாடலும் ஒத்துழைப்பும் தான் சரியான பாதை, வற்புறுத்தலும் மிரட்டலும் எதற்கும் உதவாது எனவும் சீனா குறிப்பிட்டுள்ளது.

‘உக்ரைன் உடனான போரில்  ரஷ்யா இலக்குகளை அடையும்’ 

உக்ரைனுடனான போரில் ரஷ்யா தனது இலக்குகளை அடையும். போருக்கான மூல காரணத்தையும் அழிக்கும் என டொ னால்டு டிரம்ப்புடன் தொலைபேசியில் பேசிய ரஷ்ய ஜனாதிபதி புடின் கூறியுள்ளார். இதனை புடினின் உதவியாளர் யூரி உஷாகோவ் உறுதிப் படுத்தியுள்ளார். தனது இலக்கை ரஷ்யா அடையாமல் போரை கைவிடாது. அதே நேரத்தில் உக்ரைனுடனான மூன்றாவது சுற்று பேச்சுவார்த்தைக்கும் ரஷ்யா தயாராக உள்ளது என்று உஷாகோவ் தெரிவித்துள்ளார். டிரம்ப் இதற்கு அதிருப்தி தெரிவித்துள்ளார். 

பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை : பாக்., ராணுவம் அறிவிப்பு 

ஆப்கானிஸ்தானிலிருந்து எல்லையைக் கடக்க முயன்ற 30 பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்றதாக பாகிஸ்தான் ராணுவம் அறிவித்துள்ளது. இவர்கள் தீவிரவாதிகள், பாகிஸ்தானில் செயல்படும் தலிபான் அல்லது அதனுடன் தொடர்பில் உள்ள குழுக்களைச் சேர்ந்தவர்கள் என ராணுவம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. கொல்லப்பட்டவர்களிடம் இருந்து ஆயுதங்கள், வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டுள்ளன.  இந்த நடவடிக்கை மூலமாக ஒரு பேரழிவு தடுக்கப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. 

மக்களுக்கு எதிரான “பிக் பியூட்டிபுள் மசோதா” : அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்

வாஷிங்டன்,ஜூலை 4-  அமெரிக்க நாடாளுமன் றத்தில் ஜனாதிபதி டிரம்ப் கொண்டு வந்த ‘பிக் பியூட்டி புள் மசோதா’ வெறும் 4 வாக் குகள் வித்தியாசத்தில் நிறை வேற்றப்பட்டுள்ளது.  இந்த மசோதா அமெரிக்க பணக்காரர்களுக்கு மட்டுமே பலனளிக்கும். சாதாரண  மக்களுக்கு இது பெரும் பொருளாதார நெருக்கடிகளை உரு வாக்கும் என கவலைகள் எழுந்துள்ளன.  டிரம்ப்பின் 869 பக்க மசோதா மீது வியா ழனன்று நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 218 நாடாளு மன்ற உறுப்பினர்கள் ஆதரவாகவும் 214 பேர் எதி ராகவும் வாக்களித்தனர். மசோதாவுக்கு எதிராக வாக்களித்ததில் 2 குடியரசுக் கட்சி எம்பிக்களும் உள்ளனர். ஜனநாயகக் கட்சி எம்.பி.,க்கள் அனை வரும் ஒருமனதாக மசோதாவிற்கு எதிராக வாக்க ளித்துள்ளனர்.  இந்த மசோதா டிரம்ப் கையெழுத்திட்ட பிறகு அமலாகும். அப்படி அமலானால் அமெரிக்கா வுக்கு ஏற்கனவே உள்ள 36.2 டிரில்லியன் டாலர் கள் கடனுடன் மேலும் 3.4 டிரில்லியன் டாலர்கள் கடன் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் அடுத்து வரும் பத்தாண்டுகளில் அந் நாட்டின் வரி வருவாயை சுமார் 4.5 டிரில்லியன் டாலர்களாக குறைக்கும். அதே வேளையில் அர சுக்கான செலவினங்களில் 1.1 டிரில்லியன்  டாலர்கள் வரை குறைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.   அமெரிக்க அரசின் செலவின குறைப்பானது, அந்நாட்டில் உள்ள கோடிக்கணக்கான குடிமக்க ளுக்கு வழங்கப்பட்டு வருகிற மருத்துவ உதவி திட் டத்திற்கு வழங்கப்பட்டு வருகிற நிதியை வெட்டு வதன் மூலம் செய்யப்படுகிறது.  இது அந்நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தை யும், வாழ்க்கையையும் பாதிக்கும் என முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமா உட்பட பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அனைத்து வகை யான நிதி வெட்டுக்களையும் நியாயப்படுத்தி, கோ டீஸ்வரர்களுக்கு மிகப்பெரிய வரிச் சலுகைகளை வழங்குவதே இந்த மசோதாவின் நோக்கமாக உள்ளது என நியூயார்க் பிரதிநிதி ஹக்கீம் ஜெஃப்ரிஸ் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.  இந்த மசோதா வரிச் சலுகைகளை அதிகப் படுத்துவது போல இருந்தாலும், மருத்துவ உதவி வெட்டு போன்ற காரணங்களால் மிக மோசமான விளைவுகளை உருவாக்கும். மருத்துவக் காப் பீடு அல்லது மருத்துவத்திற்கான அரசின் நிதி உத விகள் இல்லை என்றால் அமெரிக்காவில் மருத்துவ சிகிச்சை பெறுவதற்கு மிக அதிகளவி லான பணத்தை கட்டணமாக செலுத்த வேண்டும்.  இதனால்  சுமார் 1.2 கோடி அமெரிக்க மக்கள் சுகாதாரப் பாதுகாப்பை இழப்பார்கள் என்று எச்ச ரிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மசோதா மாற்று எரிசக்தி பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் கொடுக்கப்பட்டு வந்த ஊக்கத்தொகைகளையும் நீக்குகிறது. இதுபோன்ற பல காரணங்களால் இம் மசோதா பணக்கார அமெரிக்கர்களுக்கு மட்டுமே பலன் கொடுக்கும். குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் மேலும் அதிக பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளப்படுவார்கள் என எச்சரிக்கப்பட்டுள்ளது.