world

அமெரிக்காவுக்கு எரிச்சல்

மனாகுவா, ஜூன் 16- ரஷ்யாவுடனான ராணுவ ரீதியான உறவுகளை புதுப்பித்துக் கொள்வது என்று மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்றான நிகரகுவா முடிவு செய்துள்ளது. கடந்த பத்தாண்டுகளாகவே ராணுவப் பயிற்சிகளுக்கான உடன்பாடு இரு நாடுகளுக்கிடையில் இருந்து வந்தது. அந்த உடன்பாடு புதுப்பிக்கப்படக்கூடாது என்று அமெரிக்கா மிரட்டி வந்தது. ஆனால், நிகரகுவா ராணுவ வீரர்களுக்கு ராணுவப் பயிற்சி மற்றும் இரு படைகளும் இணைந்து பாதுகாப்புப் பயிற்சிகளை  மேற்கொள்வது என்ற உடன்பாட்டைப் புதுப்பிக்க அரசு முடிவு செய்தது. அந்த முடிவுக்கு நிகர குவா நாடாளுமன்றமும் ஒப்புதல் அளித்துள் ளது. இந்த உடன்பாட்டின் அடிப்படையில் பசிபிக் கடல்பகுதியில் ரோந்துப் பணிகளை மேற்கொள்வதற்கான பயிற்சியை அளிக்க 230 ரஷ்ய வீரர்கள் நிகரகுவா வரவிருக் கிறார்கள். இதை கடும் எரிச்சலுடன் அமெரிக்கா எதிர்த்துள்ளது.