வாஷிங்டன்:
கொரோனாவில் இருந்து இந்தியா மீள முழு ஊரடங்கைஅறிவிக்க வேண்டும் என்று அமெரிக்காவின் தொற்றுநோய் பிரிவின் தலைமை மருத்துவர் அந்தோணி ஃபாஸி அறிவுறுத்தியுள்ளார்.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நோய்த்தொற்றைக் தடுக்க தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்காமல் மோடி அரசு மெத்தனமாக இருந்ததே தொற்று பரவல் அதிகரிப்புக்கு காரணம் என்று அரசியல் கட்சியினர், மருத்துவர்கள்,மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்பும் அதிகரித்துள்ளது. இந்த நிலை நீடித்தால் மிக மோசமான நிலையை இந்தியாசந்திக்கும் என்று மருத்துவ வல்லுநர்கள் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் இந்தியாவில் ஏற்பட்டுள்ள பாதிப்புகுறித்து அமெரிக்காவின் தொற்றுநோய் பிரிவின் தலைமைமருத்துவர் அந்தோணி ஃபாஸி கூறுகையில், “இந்தியா இப்போது மிக மோசமான நிலையில் இருக்கிறது. இப்படியான சூழலில், உடனடி தீர்வு என்னவென்பதையே இந்தியா பார்க்க வேண்டும். உடனடியாக ஆக்சிஜன் விநியோகம், மருந்துகள், தடுப்பூசிகள், பிபிஇ பாதுகாப்பு ஆடைகளை அதிகமாக விநியோகம் செய்ய வேண்டும். அனைவரையும் ஒன்றிணைத்து கொரோனா சிக்கலைக் கையாள வேண்டும். மேலும் இந்தியா பொதுமுடக்கத்தை அமல்படுத்த வேண்டும். நாடு தழுவிய முழுபொதுமுடக்கம் என்பது ஏற்க முடியாத விஷயம்தான். ஆனால், இப்போதைய சூழலில் அதுமட்டுமே மிகச்சிறந்தபலனை தரும். இதனால் கொரோனா பரவுதலும் தடுக்கப்படும்; மேற்கொண்டு பொருளாதார பின்னடைவும் ஓரளவுதவிர்க்கப்படும். அதைவிட்டுவிட்டு, இந்தியாவில் கொரோனா ஒழிந்துவிட்டது என அறிவிப்பது, அவசரத்தில் செய்யும்செயல்” என்று தெரிவித்துள்ளார். இந்தியாவிற்கு அமெரிக்காவில் இருந்து நிதி உதவி மற்றும் ஆக்சிஜனை அந்தோணிஃபாஸி செய்து வருகின்றார்.