world

img

சூடானில் கொடூரம் : 6,000-க்கும் அதிகமானோர் படுகொலை

சூடானில் கொடூரம் : 6,000-க்கும் அதிகமானோர் படுகொலை

டார்பூர்,பிப்.16- சூடானின் டார்பூர் பிராந்தியத்தில் 2025 அக்டோபர் இறுதியில், அந்த நாட்டு துணை ராணுவம் நடத்திய கொடூரமான வன்முறை களின் போது மூன்று நாட்களில் 6,000-க்கும் மேற்பட்ட மக்கள் படுகொலை செய்யப்பட்ட தாக  ஐக்கிய நாடுகள் அவை தெரிவித்துள் ளது. சூடானில் அந்நாட்டு ராணுவமும், துணை ராணுவத்துக்கு இடையே உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. டார்பூர் மாகாணத்தின் தலை நகரான எல்ஃபாஷரை 2025 அக்டோபர் 26 அன்று துணை ராணுவமும் அதற்கு ஆதர வாக போரிட்டு வரும் ஜஞ்சாவீட் (Janjaweed) என்ற அரபுப் படைகளும் இணைந்து  கைப்பற்றின. அதன் பிறகு நகருக்குள் புகுந்து வெறியாட்டத்தில் ஈடுபட்டன. இத்தாக்குதலில், போர்க்குற்றங்கள், மனிதத்தன்மைக்கு எதிரான குற்றங்களுக்கு இணையான அட்டூழியங்கள் அரங்கேறி யுள்ளதாக ஐ.நா மனித உரிமைகள் அலுவல கம் (OHCHR) தனது புதிய அறிக்கையில் தெரிவித்துள்ளது. 29 பக்கங்கள் கொண்ட ஐ.நாவின் புதிய அறிக்கையில் 2025 அக்டோபர் 25 முதல் 27 வரையிலான காலகட்டத்தில் எல் பாஷர் நகருக்குள் 4,400 பேர் கொல்லப்பட்டனர். தப்பி ஓட முயன்றபோது மேலும் 1,600 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர் என தெரிவிக்கப் பட்டுள்ளது.   கும்பல் கொலைகள், பாலியல் வன்முறை, பணம் பெறுவதற்காக மக்களை கடத்துவது, சித்ரவதை செய்வது, மக்களைக் காணாமல் போகச் செய்தல் (கிட்டத்தட்ட தடையமின்றி கொல்வது) போன்ற பல கொடூரங்கள் நடந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்  உண்மையான உயிரிழப்புகளின் எண்ணிக்கை இதைவிடப் பல மடங்கு அதிகமாக இருக்கக்கூடும் என்றும் அவ் வறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது. சூடான் ராணுவத்திற்கு எகிப்து மற்றும் சவூதி அரேபியாவும்  துணை ராணுவத்திற்கு ஐக்கிய அரபு அமீரகமும்  (UAE) மறைமுக ஆதரவளிப்பதாகக் கூறப்படுவது குறிப்பிடத் ்தக்கது.