world

img

"செல்வந்தர்களுக்கு வரி விதிப்பீர்" - ஃபேஷன் ஷோ உடையில் அரசியல் பேசும் அமெரிக்கப் பெண் எம்.பி 

அமெரிக்காவில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் மெட் காலா(met gala)  ஃபேஷன் ஷோ நிகழ்ச்சி இந்த ஆண்டு சற்று பரபரப்பாகப் பேசப்பட்டுவருகின்றது . அதற்குக் காரணம் , அந்நிகழ்ச்சியில் , மாடல்கள் உடுத்தி வந்த அரசியல் அர்த்தங்கள் பொருந்திய உடைகள் ஆகும் . 

நியூயார்க்கில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தொலைக்காட்சி பிரபலமான கிம் கர்தாஷியனின் உடை அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது . இவர் , கறுப்பின மக்கள் மீதான வன்முறையை எதிர்த்தும் , கறுப்பின மக்களுக்கு ஆதரவளிக்கும் விதமாகவும் தலை முதல் முழு உடலையும் மறைக்கும் விதமாகக் கருப்பு உடை அணிந்து கலந்துகொண்டார் .

அதற்கும் மேலாக , மக்களிடம் அதிக வரவேற்பைப் பெற்ற மற்றொருவர் , இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமெரிக்கப் பெண் எம்.பி .அலெக்ஸ்சாண்ட்ரியா ஒகாசியோ கார்டஸ் ஆவார்.

இவர் அணிந்து வந்த வெள்ளை நிற ஆடையில் , பின் புறமாகச் சிவப்பு நிறத்தில் , "செல்வந்தர்களுக்கு வரி விதிப்பீர்" எனும் பொருள்படும் வகையில் ஆங்கில மொழியில் வாசகம் பொறிக்கப்பட்டிருந்தது . இவ்வாறான வாசகம் அரசியல் ரீதியாகவே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . 

உலகின் முக்கிய கவனம் பெற்ற ஃபேஷன் நிகழ்ச்சி தற்போது அரசியல்களமாக மாறியுள்ளது அனைவரையும் வெகுவாக ஈர்த்துள்ளது .