world

img

டிசம்பருக்குள் லா நினா உருவாக 57 சதவீதம் வாய்ப்பு

நியூயார்க்,நவ.19- நவம்பர் -  டிசம்பர் மாதங்களுக்கிடையே ‘லா நினா’ காலநிலை உருவாக 57 சத வீதம்  வாய்ப்பு உள்ளது என  அமெரிக்க வானிலை முன்னறிவிப்பாளர்கள் எச்ச ரிக்கை விடுத்துள்ளனர். லா நினா காலநிலை குறைந்த மழைப் பொழிவை மட்டுமே கொடுக்கும் மேலும் மோசமான வறட்சி நிலைமைகளை உரு வாக்கும். இதனால் உலகம் முழுவதும் பல நாடுகளில் விவசாயத்தை கடுமையாக பாதிக் குமெனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.    டிசம்பர் -  ஜனவரி மாதம் தோன்றும் லா நினா 2025 மார்ச் மாதம் வரை நீடிக்க லாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பொது வாக  9-12 மாதங்கள் வரை நீடிக்கும் இந்த காலம் சில நேரங்களில் பல ஆண்டுகள் வரை கூட நீடிக்கலாம்.  லா நினா  லா நினா பசிபிக் பெருங்கடலில் ஏற்படும் ஒரு காலநிலை நிகழ்வாகும். மத்திய மற்றும் கிழக்கு பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பு நீர் வழக்கத்தை விட  அதிக குளிர்ச்சியாக இருக்கும். இந்த காலத்தில் வர்த்தகக் காற்றுகள் (பல ஆண்டுகளுக்கு முன்வணிக கப்பல்கள் இந்த காற்று வேகத்தையும் பயன்படுத்தி பயணித்ததால் இப்பெயர் பெற்றது) வலுவடைந்து வெப்ப மேற் பரப்பு நீரை ஆசியா நோக்கி நகர்த்தும். அப்போது தென் அமெரிக்க கடற்பகுதி களின்  ஆழத்திலிருந்து குளிர்ந்த நீர் கடற் பரப்பின் மேலே வரும்.

பாதிப்புகள் 

லா நினா காரணமாக தென்கிழக்கு ஆசியா மற்றும் ஆஸ்திரேலியாவில் அதிக மழைப்பொழிவு ஏற்படும் குறிப்பாக தென் அமெரிக்காவில் வறண்ட சூழ்நிலை நிலவும், அட்லாண்டிக் பகுதியில் புயலின் தீவிரம் மேலும் அதிகமாகும்.   எல் நினோ, லா நினா மற்றும் நடுநிலை நிலையாக உள்ள வானிலை ஆகிய வற்றுக்கு இடையேயான சுழற்சி பொதுவாக இரண்டு முதல் ஏழு ஆண்டுகள் வரை நீடிக்கும் என அறிவியலாளர்கள் தெரிவித் துள்ளனர்.மேலும் இவை நேரடியாக விவசாய உற்பத்தியை பாதிக்கின்றது. இதனால் ஏற்கனவே மேற்குலக நாடுகளின் சுரண்டலால் உள்கட்டமைப்பு கள் விவசாயம், விவசாய நிலங்கள் அழிக் கப்பட்டு பாதிப்பை சந்தித்து வரக்கூடிய சோமாலியா, எத்தியோப்பியா, சூடான், காசா போன்ற ஆப்பிரிக்க மத்திய கிழக்கு நாடுகளும், வளரும் பொருளாதாரங்களாக வகைப்படுத்தத்தப்பட்டுள்ள இந்தியா மற்றும் அதன் அருகாமை ஆசிய நாடுகளில் வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள கோடிக் கணக்கான மக்கள் கடுமையன உணவு  நெருக்கடியை எதிர் கொள்வார்கள் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இது போன்ற கால நிலை மாற்றத்தை எதிர்கொள்ளவும், பாதிக்கப்படும் விவசாய உற்பத்தியை ஈடுகட்ட புதிய அறிவியல்  தொழில் நுட்பங்களை பயன் படுத்தி விவசாய உற்பத்தியை அதி கரிக்கும் திட்டங்கள் இந்தியா உள்ளிட்ட பல வளரும் நாடுகளில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.