பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் ரிக்டர் அளவில் 6.5 ஆக பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் இதுவரை 11 பேர் உயிரிழப்பு.100க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அமெரிக்க புவியியல் ஆராய்ச்சி மையமானது நிலநடுக்கத்தின் தாக்கம் ரிக்டர் அளவுகோளில் 6.5 ஆக இருந்ததாகவும் , பூமிக்கு அடுயில் 116 மைல் தொலைவில் மையம் கொண்டிருந்திருந்தது என்றும் தெரிவித்திருந்தது.மேலும் ஆப்கானிஸ்தானின் ஹிண்டுகுஷ் மலைகளின் தெற்கு தென் கிழக்கு பகுதியை ஒட்டிய ஜுர்ம் நகரில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாகவும் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானின் கைபர் பக்துவான் மாகாணத்தில் மட்டுமே 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் நேற்றிரவு டெல்லி, உத்திர பிரதேசம், ஹரியானா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களிலும் லேசான நிலாதிர்வு உணரப்பட்டது.