world

img

ரஷ்யா - வியட்நாம் இருதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து

ஹெனோய்.ஜூன் 21-   ரஷ்ய ஜனாதிபதி புடினின் வடகொரியா பயணத்தை தொடர்ந்து இரண்டு நாள் அரசு முறை பயணமாக வியட்நாம் சென்ற போது இருநாடுக ளுக்கும் இடையிலான தேசிய பாதுகாப்பு, அணு ஆற்றல், எரிசக்தி உற்பத்தி உள்ளிட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.  உலகளாவிய பதற்றங்களுக்கு இடையே ரஷ்ய ஜனாதிபதி, வடகொரியா, வியட்நாமிற்கு  மேற்கொண்ட இந்த பயணம் நேட்டோ படையின் அச்சுறுத்தலுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் உள்ளதாக கருதப்படுகிறது. மேலும்  வியட்நாம் கம்யூனிஸ்ட் அரசின் ‘மூங்கில் இராஜதந்திரத்தை’  ரஷ்யா  திறமையாகப் பயன்படுத்துவதை எடுத்துக் காட்டுகிறது என கூறப்படுகிறது.  மூங்கில் ராஜதந்திரம் சர்வதேச உறவுகளில் நெகிழ்வுத் தன்மை, அரசியலை உறுதியாக கடைப்பிடித்து வரும் அதே வேளையில் எந்த அணிக்கும் வளைந்து கொடுக் காமல் தனது சொந்த தேசிய நலன்களை வலி யுறுத்தி வருகிற சர்வதேச கொள்கையை கடைப் பிடித்து வருகிறது வியட்நாம் அரசு. இந்த நிலைப் பாடு ‘மூங்கில் இராஜதந்திரம்’ என அழைக்கப் படுகிறது.  உக்ரைன் - ரஷ்யா போரில் எந்த நாட்டின் பக்கமும் சாராமல் நடுநிலை நிலைப்பாட்டை பேணு கிறது வியட்நாம் அரசு. அதே போல கடந்த வாரம் சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற உக்ரைன் அமைதி உச்சி மாநாட்டில் பங்கேற்க வியட்நாம் மறுத்தது.

இது அந்நாட்டின் உறுதியான மூங்கில் இராஜ தந்திரத்தை வெளிப்படுத்தியுள்ளது.   வியட்நாம் செல்வதற்கு முன்  புடின் அந்நாட் டின் பத்திரிகைக்கு எழுதிய கட்டுரையிலும் அந் நாட்டின் மூங்கில் ராஜதந்திரத்தை குறித்து பாராட்டி யுள்ளார். மேலும்  ரஷ்யாவின் நம்பிக்கையான கூட்டாளிகளில் வியட்நாமும் ஒரு நாடாகும் என தெரிவித்துள்ளார். பாதுகாப்பு ஒப்பந்தம்  ரஷ்யாவும் வியட்நாமும் சர்வதேசச் சட்டத்தின் வரம்புகளுக்குள் பாதுகாப்பு ஒத்துழைப்பை அதி கரிக்க ஒப்புக்கொண்டுள்ளன. மேலும் “தங்கள் நாட்டின் சுதந்திரம், இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கு தீங்கு விளைவிக்கும் மூன்றாம் நாடுகளுடன் கூட்டணி  மற்றும் ஒப்பந் தங்களில் நுழைய வேண்டாம்” என வியட்நாம் ஜனாதிபதி டூ லாம் அழைப்பு விடுத்துள்ளார். இந்த பாதுகாப்பு ஒத்துழைப்பு மூன்றாம் நாடுகளுக்கு எதி ரானதல்ல எனவும் கூறப்பட்டுள்ளது.  அணு ஆற்றல் வியட்நாமில் அணு அறிவியல் மற்றும் தொழில் நுட்ப மையத்தை 2027 க்குள் கட்டுவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. எரிசக்தி உற்பத்தி  ரஷ்ய எரிவாயு நிறுவனமான நோவாடெக் பெட்ரோவியட்நாம் நிறுவனத்துடன் இணைந்து ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள் ளது. இதன்படி வரும் ஆண்டுகளில் வியட்நாம் திரவ இயற்கை எரிவாயு (எல்என்ஜி) திட்டங்களைத் தொடங்க உள்ளது. மேலும் பெட்ரோவியட்நாம் மற்றொரு ரஷ்ய நிறுவனத்துடன் இணைந்து புதிய பசுமை எரி பொருட்கள் தயாரிப்பில் முதலீடு செய்யவும் ஒப்பந்தம் ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.