world

img

ஆசியக்கோப்பை: இலங்கை-பாகிஸ்தான் அணிகள் இன்று மோதல்

ஆசியக் கோப்பையின் இன்றையப் போட்டியில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றன.

இன்றையப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இதனையடுத்து, பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

இரு அணிகளுக்கும் இடையேயான இந்தப்போட்டி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இலங்கை மற்றும் பாகிஸ்தான் என இரு அணிகளுமே இறுதிப்போட்டிக்கு ஏற்கனவே தகுதி பெற்றுவிட்ட நிலையில் இன்று நடைபெறும் இந்தப்போட்டி நாளை மறுநாள் (செப்டம்பர் 11 ) இரு அணிகளுக்கும் இடையே நடைபெற உள்ள இறுதிப்போட்டிக்கு முன்னோட்டமாக அமைந்துள்ளது.