world

img

24 நாடுகளில் பரவியது ஒமிக்ரான் - உலக சுகாதார மையம்

உலகம் முழுவதும் கொரோனா தொற்று பரவல் சற்று குறைந்த நிலையில் தற்போது அதிவேகமாகப் பரவக் கூடியது என்று கருதப்படும் ஒமிக்ரான் வகை கொரோனா தற்போது பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது.  அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, சவூதி அரேபியா, நைஜீரியா உள்ளிட்ட 24 நாடுகளில் பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. 
அமெரிக்காவில் கலிஃபோர்னியாவை சோ்ந்த ஒருவருக்கும், வடக்கு ஆப்பிரிக்க நாடொன்றிலிருந்து வந்த ஒருவருக்கு சவூதி அரேபியாவிலும், தென் ஆப்பிரிக்காவிலிருந்து வந்த இருவருக்கு நைஜீரியாவிலும் ஒமிக்ரான் வகை தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், ஒமிக்ரான் தொற்று ஏற்கெனவே பிரிட்டன், இத்தாலி, இஸ்ரேல், நெதா்லாந்து, ஜொ்மனி உள்ளிட்ட 12 ஆக இருந்த நிலையில், தற்போது ஆஸ்திரேலியா, கனடா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்கு பரவி தொற்று பாதித்த நாடுகளின் எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளது

;