world

img

புதிய இலக்குகளை நோக்கி விரையும் சீனக்கம்யூனிஸ்ட் கட்சி

பெய்ஜிங், அக்.15- சோசலிசத்தைக் கட்டிக்காப்பதில் தொடர் சாதனை  புரிந்து வரும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20 ஆவது  தேசிய மாநாடு அக்டோபர் 16 அன்று அந்நாட்டின் தலை நகர் பெய்ஜிங்கில் தொடங்குகிறது. 100 ஆண்டு களுக்கு முன்னதாக, கடுமையான வறுமையில் வாடும் மக்களின் எண்ணிக்கையில் முதலிடத்தில் இருந்த மக்கள் சீனம், இன்று கடுமையான வறுமையே  இல்லாத நாடாக மாறியுள்ளது. இந்தச் சாதனைக்கு கட்சியே பெரும் காரணம் என்று உலகம் முழுவது முள்ள பல்வேறு நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ள னர்.

பெய்ஜிங், அக்.15- சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20வது  தேசிய மாநாடு அந்நாட்டுத் தலைநகர் பெய்ஜிங்கில் அக்டோபர் 16 அன்று தொடங்குகிறது.  இந்த மாநாட்டுத் தயாரிப்புப் பணிகளின் நிறைவுப் பகுதியாக கட்சி யின் 19வது மத்தியக்குழுவின் பிளீனம் நடந்தது. நான்கு நாட்கள் நடந்த இந்தக் கூட்டத்தில் 20வது மாநாட்டில் பேச  வேண்டிய அம்சங்கள் பற்றி இறுதிப் படுத்தினர். இந்தக்கூட்டத்தில் கட்சி யின் மத்தியக்குழுப் பொதுச் செய லாளர் ஜி ஜின்பிங் வேலையறிக்கை யை முன்வைத்தார். 20வது மாநாட்  டுக்கான 19வது மத்தியக்குழுவின் அறிக்கை, சீனக்கம்யூனிஸ்ட் கட்சி யின் மத்தியக் கட்டுப்பாட்டு ஆணைய வேலையறிக்கை மற்றும் கட்சி அமைப்புத்திட்டத்தில் ஒரு திருத்தம் ஆகியவை விவாதிக்கப்பட்டு ஒப்புக் கொள்ளப்பட்டன. இந்த மூன்று ஆவ ணங்களையும் தேசிய மாநாட்டில் பரி சீலனைக்காக முன்வைப்பது என்றும் முடிவெடுத்தனர்.

இந்தப் பிளீனத்தில் 199 உறுப்பி னர்கள் கலந்து கொண்டனர். அவர் களோடு 159 மாற்று உறுப்பினர்களும் பங்கேற்றனர். தற்போதைய அரசி யல் நிலைமை மற்றும் நாடு சந்தித்து வரும் இலக்குகள் ஆகியவற்றை விவாதித்தனர். புதிய சகாப்தத்தில் சீனத் தன்மையுடனான சோசலிசத்தை வளர்த்தெடுப்பது மற்றும் அனைத்து  வகைகளிலும் ஒரு நவீன சோசலிச  நாட்டைக் கட்டுவது பற்றி ஆலோ சனைகள் மேற்கொள்ளப்பட்டன. 20வது தேசிய மாநாட்டை நடத்து வதற்கான அனைத்துத் தயாரிப்பு களையும் இந்தப் பிளீனம் இறுதிப் படுத்தியது.

பிளீனத்தில் பேசியவர்கள், “கோவிட் பெருந்தொற்றை எதிர்  கொண்ட விதம், சமூகப் பொருளா தார மேம்பாடு, மக்களின் நலன் மேம் படுத்துதல், கட்சி மீது தீவிரமான கண்காணிப்பு” உள்ளிட்டவை பற்றி விவாதித்தனர். பிரிவினைவாதிகளை சமாளித்த விதம் மற்றும் உக்ரைன் நெருக்கடியால் உருவான சவால்  களை எதிர்கொண்டது ஆகியவற் றிற்கு உறுப்பினர்கள் பாராட்டு தெரி வித்தனர்.

தைவான் மற்றும் ஹாங்காங்

பிளீனத்தின் முன் வைக்கப்பட்ட வேலையறிக்கையில் தைவான் மற்றும் ஹாங்காங் தொடர்பான வேலைகளும் இடம் பெற்றிருந்தன. ஹாங்காங் சிறப்பு நிர்வாகப்பகுதியில் பல்வேறு குழப்பங்கள் நடந்தன. அவற்றிலிருந்து மீண்டு நிலையான நிர்வாகம் நடைபெறுகிறது. தைவா னைப் பொறுத்தவரை, ஒரு சீனம்  என்ற கோட்பாடு வலியுறுத்தப்பட்டு வருகிறது. பிரிவினைவாதிகளை எதிர்ப்பதில் உறுதியாக இருந்த தோடு, நாட்டின் இறையாண்மையை யும், பிரதேச ஒற்றுமையையும் பாது காப்பதில் உறுதியாக இருந்ததை பிளீ னம் அங்கீகரித்தது.

மாநாடு தொடக்கம்

இந்நிலையில் அக்.16 அன்று மாநாடு தொடங்குகிறது. அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான வேலைத்திட்டம் இதில் விவாதிக்கப்படும். நாடு முழுவதுமிருந்து தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகள் வேலைத்திட்டத்தை இறுதிப்படுத்துவார்கள்.

 

 

 

;