world

img

கியூப கம்யூனிஸ்ட் சித்தாந்தவாதி

கியூப கம்யூனிஸ்ட் சித்தாந்தவாதி

மார்க்சிய - லெனி னியப் புரட்சி யாளரும் அரசியல்வாதி யுமான பேபியோ க்ரோபர்ட் 1905 ஆக.30 அன்று போலந்து நாட்டில் பிறந்தார். இவரது இயற்பெயர் ஆபிரகாம் க்ரோபர்ட்.

1920-களின் முற்பகுதி யில் கியூப கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவன உறுப்பி னராக இருந்த பேபியோ, 1959 கியூபப் புரட்சியில் முக்கியப் பங்கு வகித்தார். 1922 துவக் கத்தில் போலந்தின் இளம் கம்யூனிஸ்ட் கழகத்தில் முக்கியப் பங்காற்றினார். கம்யூனிஸ்ட் நடவடிக்கை களில் ஈடுபட்டதால், பேபியோ போலந்திலிருந்து வெளியேறி கியூபாவில் குடியேற வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டது. 

கியூபாவில் தையல்காரர் ஒருவரின் உதவியாளராக பணியாற்றிய பேபியோ, பின்னர் கியூப தொழிற்சங் கங்களில் இணைந்து செயல் படத் துவங்கி, கியூபப் புரட்சி யின் அரசியல் தலைமையை சோசலிசப் பாதையில் வழிநடத்துவதில் முக்கியமான வராக உயர்ந்தார். 

1925 இல் கியூப கம்யூ னிஸ்ட் கட்சியை நிறுவியவர்க ளில் இவரும் ஒருவர். கியூப கம்யூனிஸ்ட் கட்சியின் சித்தாந்தவாதியாகவும், மத்தியக் குழு உறுப்பினராக வும், நாடாளுமன்ற உறுப்பி னராகவும் இருந்த பேபி யோ, 1960-களில் கியூப சோச லிசத்தை வழிநடத்தினார். கட்சியின் வரலாற்றாசிரி யராகவும் கருதப்பட்ட பேபி யோ, 1994 அக்.22 அன்று காலமானார்.