தெற்கு ஹங்கேரியில் இன்று அதிகாலை இரயில் தடம் புரண்ட விபத்தில் பலர் உயிரிழந்தாகவும் மேலும் பலர் படுகாயமடைந்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
ஹங்கேரி மைண்ட்சென்ட் நகரில் இன்று அதிகாலை இரயில் தண்டவாளத்தில், வேன் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து இரயிலின் மீது மோதி விபத்துக்குள்ளானதில், ரயில் தடம் புரண்டுள்ளது. இந்த ரயிலில் 22 பேர் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 2 பேர் படுகாயமடைந்துள்ளனர். 8 பேர் லேசான காயம் அடைந்துள்ளனர்.
மேலும் வேனில் பயணித்த அனைவரும் உயிரிழந்ததாக ஹங்கேரிய மாநில இரயில்வே தெரிவித்துள்ளது. இதுகுறித்து கவுண்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.