world

img

தீக்கதிர் உலக செய்திகள்

ஈரான் ஜனாதிபதி தேர்தலில் 6 பேர் போட்டி 

ஈரான் நாட்டின் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் ்கள் இறுதிப்பட்டியலில் 6 பேர் இடம் பிடித்துள்ளனர். ஈரானின் பாதுகாவலர் சபை வெளியிட்டுள்ள அப் பட்டியலில் அந்நாட்டின் புரட்சிகர காவல்படையின் முன்னாள் தளபதி முகமதுபாக்கர் கலிபாப், அயதுல்லா அலி கமேனியின்அலுவலக தலைவர் சயீத் ஜலிலி ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.  முன்னாள் ஜனாதிபதி யான மஹ்மூத் அஹ்மதி நெஜாத்போட்டியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். கடந்த தேர்தலிலும் இவர் தேர்த லில் போட்டியிடுவது தடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

மருத்துவமனையில் இருந்து  ஹைட்டி பிரதமர் திரும்பினார் 

ஹைட்டி நாட்டின் புதிய பிரதமர் கேரி கோனில் மருத்துவமனை யில் இருந்து திரும்பினார்.  உடல் நலப் பிரச்சனை யின் காரணமாக சனிக்கிழமையன்று மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஆஸ்துமா பிரச்சனை இருப்பதாகக் கூறப்படுகிறது.  எனினும் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டதன் காரணத்தை அரசு தரப்பில் அதிகாரப் பூர்வமாக தெரிவிக்கவில்லை. இந்நிலையில் ஞாயி றன்று இரவு அவர் மருத்துவமனையில் இருந்து திரும்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க லிபியா திட்டம் 

2025 ஆம் ஆண்டு இறுதிக்குள்  எண்ணெய் உற்பத்தியை நாளொன்றுக்கு 20 லட்சம் பீப்பாய்களாக   அதிகரிக்க லிபிய அரசு திட்டமிட்டுள் ளது. அந்நாட்டின் தேசிய எண்ணெய் கூட்டமைப் பின் தலைவர் ஃபர்ஹத் பெங்தாராவுடனான பேச்சுவார்தைக்குப் பிறகு இந்த அறிவிப்பு வெளி யிடப்பட்டுள்ளது. இதன் மூலம் வரும் நாட்களில் அந்நாட்டின் தனியார் துறையும் எண்ணெய் உற் பத்தியை அதிகரிக்க உள்ளது. லிபியா தற்போது நாளொன்றுக்கு 12 லட்சத்து 50 ஆயிரம் பீப்பாய் எண்ணெய் உற்பத்தி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

வங்கதேசத்தில் 8 ஆம் வகுப்பு வரை இலவசக்  கல்வி

வங்கதேச அரசு 8 ஆம் வகுப்பு வரை இலவச கல்வி கொடுக்க முடிவெடுத்துள்ளது. ஆரம்ப நிலை கல்வியை விரிவுபடுத்தும் நோக்கத் தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அந் நாட்டு கல்வித்துறை அமைச்சர் மொஹிபுல் சவுத்ரி தெரிவித்துள்ளார். மேலும் நாட்டின் இடை நிலை மற்றும் உயர்கல்வித் துறை இந்தத் திட்டத் தைச் செயல்படுத்தி வருவதாக தெரிவித்துள் ளார்.  தற்போது 1990 ஆம் ஆண்டின் தொடக்கக் கல்வி (கட்டாய) சட்டம், 1990 இன் படி,5 ஆம் வகுப்பு வரை இலவச கட்டாயக் கல்வி அமலில் உள்ளது.

வறட்சி,பனிப்பொழிவால்  39 நகராட்சிகள் பாதிப்பு 

கடுமையான வறட்சி மற்றும் உறைபனி யின் காரணமாக பொலிவியாவில்  39  நகராட்சிகள்  பாதிக்கப்பட்டுள்ளன. அந்நாட்டில் வறட்சிக் காலம் துவங்கியுள்ள சூழலில் கால நிலை மாற்றத்தால் ஏற்பட்டுள்ள பனிப்பொழிவு மற்றும் ஆலங்கட்டி மழை காரணமாக சுமார் 30 நகராட்சிகளில் பேரழிவு ஏற்பட்டுள்ளது. இத னால் 32,687 குடும்பங்கள் பாதிக்கப் பட்டுள்ளன. 13,448 குடும்பங்கள் இடம்பெயர்ந் துள்ளன. இந்த நகராட்சிகளில் விவசாயமும் பெரும் அழிவை சந்தித்துள்ளது.

;