அஜர்பைஜான் ஜனாதிபதித் தேர்த லில் இல்ஹாம் அலியேவ் 92.1 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றி பெற் றுள்ளார். பதிவான அனைத்து வாக்குகளும் எண்ணப்பட்ட நிலையில் அந்நாட்டின் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக இந்த அறிவிப்பை வெளியிட்டது.2020-2023 ஆண்டு ஆர்மீனியா ஆக்கிரமிப்பில் இருந்து விடுவிக்கப்பட்ட கராபாக் பகுதி உட்பட வாக்குப்பதிவு நடைபெற்றதால் இந்த தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப் பட்டது.