world

img

இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா ஏவுகணை தாக்குதல்

டெல்அவிவ், ஆக.25 - லெபனானில் இருந்து ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேலுக்குள் நடத்திய மிகப்பெரிய அளவிலான  ட்ரோன் தாக்குதல்களை தொடர்ந்து இஸ்ரே லில் 48 மணிநேரத்திற்கு அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. 

அவசரகால நிலை அறிவிப்பு ஆகஸ்ட் 25 ஞாயிறன்று காலை 6 மணி முதல் அமலாகியுள்ளது என பாது காப்புத் துறை அமைச்சர் யோவ் கேலன்ட் தெரிவித்துள்ளார். 

இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து சர்வதேச சட்டங்களை மீறி எல்லை  கடந்த பயங்கர வாதத்தில் ஈடுபட்டு வருகிறது. அண்டை நாடுகளின் எல்லைக்குள் புகுந்து பாலஸ்தீன ஆத ரவு அமைப்புகளின் தலைவர்களை படுகொலை செய்கிறது. கடந்த மாதம் ஈரானில் இருந்த ஹமாஸ் அமைப்பின் தலைவர் இஸ்மாயில் ஹனியே, லெபனான் ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய கமாண்டரான ஃபுவாட் ஷுக்ர் கடந்த வாரம் ஃபதா அமைப்பின் தலை வர்களுள் ஒருவனரான கலீல் அல்-மக்தா ஆகியோரை படுகொலை செய்தது இஸ்ரேல் ராணுவம்.

இந்த நிலையில், ஞாயிற்றுக் கிழமையன்று 300 க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை, இஸ்ரேலின் 11 ராணுவத்  தளங்கள் மீது ஏவி  மிகப் பெரிய அளவிலான தாக் குதலை இஸ்ரேல் மீது  ஹிஸ்புல்லா அமைப்பு துவங்கியது.  

இந்த தாக்குதலை முதல் கட்ட தாக்குதல் தான் எனவும்  இது வெற்றி கரமாக முடிந்துள்ளது எனவும் ஹிஸ் புல்லா அமைப்பின் தலைவர் நஸ் ரல்லா தெரிவித்துள்ளார்.   இந்த தாக்கு தலை தொடர்ந்து லெபனான் மீது இஸ்ரேல் ராணுவம் குண்டு மழை களை பொழிந்து வருகிறது. லெபனா னுக்குள்  கிட்டத்தட்ட 17 இடங்களை குறி வைத்து இஸ்ரேல் ஏவுகணைத் தாக்கு தல் நடத்தியுள்ளது. 

இஸ்ரேலின் ஏவுகணை எதிர்ப்பு  அமைப்புகளான அயர்ன் ட்ரோம்கள் பல நேரங்களில் சரியாக செயல்படா ததால் ஹிஸ்புல்லாவின் ஏவுகணை களும், ட்ரோன்களும் இஸ்ரேல் எல்லைக்குள் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. ஹிஸ்புல்லா பெரிய அளவில் ஏவுகணைத் தாக்குதலை துவங்கியுள்ள நிலையில் மக்கள் வெளியே வரக்கூடாது, கூட்டமாக இருக்கக் கூடாது என அறிவுறுத்தப் பட்டுள்ளது. ஹிஸ்புல்லாவின் இந்த பதில் தாக்குதல் முழுப் போரை தூண்டிவிடுமோ என்ற அச்சத்தை கிளப்பியுள்ளது.

எகிப்தில் கடந்த வாரம் நடந்த போர் நிறுத்திற்கான பேச்சுவார்த்தையில் கூட இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு, போரை இடைநிறுத்தி ஹமாஸ் வசம் உள்ள இஸ்ரேல் பணயக்கைதிகளை மீட்க மறுத்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.