world

img

ரஃபா மீதான போரை நிறுத்த உத்தரவிட வேண்டும்

ஹேக்,மே16- ரஃபா நகரில் இனப்படுகொலையை தடுக் கும் வகையில் போரை நிறுத்த இஸ்ரேலுக்கு உத்தரவிடுமாறு தென்னாப்பிரிக்கா சர்வதேச நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளது.  ரஃபாவில்  10 லட்சத்திற்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் அடைக்கலம் புகுந்துள்ளனர். இந்நிலையில் கடந்த சில வாரங்களாக இஸ்ரேல் ராணுவம் அப்பகுதியில் தரைவழித் தாக்குதலை நடத்தி வருவதோடு பாதிக்கப் படும் மக்களை மீண்டும்  இடம் பெயரக் கட்டா யப்படுத்தி வருகிறது.  இந்நிலையில் காசாவில் பாலஸ்தீனர்களின் கடைசி அடைக்கலமாக இருப்பது ரஃபா பகுதி மட்டும் தான். எனவே போர் நிறுத்தத்தை கொண்டுவர இஸ்ரேலுக்கு சர்வதேச நீதி மன்றம் உத்தரவிட வேண்டும் என தென்னாப் பிரிக்கா கோரியுள்ளது.   ரஃபா மீது ஆயுத தாக்குதல்களை மட்டு மின்றி அப்பகுதியில் ஐநா வழங்கி வந்த  நிவாரண உதவிகளையும் தடுத்து நிறுத்தியுள் ளது. இதனால் உணவு, குடிநீர் மருத்துவ மனைகளுக்கு தேவையான மருந்துகள் என எந்த மனிதாபிமான உதவிகளும் கிடைக்கா மல் பாலஸ்தீனர்கள் துன்பத்தில் தள்ளப் பட்டுள்ளனர் எனவும் தென்னாப்பிரிக்கா குறிப்பிட்டுள்ளது.  காசாவிற்குள் ஐ.நா. அதிகாரிகள், மனிதா பிமான உதவிகளை வழங்கும் அமைப்புகள் மற்றும் பத்திரிகையாளர்கள் மற்றும் புலனாய் வாளர்களுக்கும்  இஸ்ரேல் அனுமதி மறுத்து வருகிறது. இவர்களை இஸ்ரேல் அனுமதிக்க வேண்டும் என்றும் தென்னாப்பிரிக்கா நீதி மன்றத்தில் கேட்டுக்கொண்டுள்ளது. ஏற்கனவே இஸ்ரேல் மீது தென்னாப்பிரிக்கா இனப்படுகொலை வழக்கை தொடுத்து நடத்தி யது. அதற்கு உலக நாடுகள் பலவும் ஆதர வளித்ததோடு அந்த வழக்கில் தங்களையும் இணைத்துக்கொண்டன. அந்த வழக்கின் ஒரு பகுதியாக இந்த வழக்கையும் தென்னாப்பி ரிக்கா தொடுத்துள்ளது.   அந்த வழக்கில் சர்வதேச நீதிமன்றம் விதித்த இடைக்கால உத்தரவுகளை அமல்படுத்தவோ, பின்பற்றவோ எந்த நடவடிக்கையையும் எடுக்க வில்லை, மாறாக அந்த உத்தரவுகளை இஸ்ரேல் தொடர்ந்து மீறுவதோடு இனப்படுகொலையை தீவிரப்படுத்தியும் வருவது குறிப்பிடத்தக்கது.

;