world

img

ராணுவத்தினரின் எண்ணிக்கை குறைப்பு

கொழும்பு, ஜன.14- செலவைக் குறைக்கும் நடவ டிக்கையாக தனது ராணுவத்தினரின் எண்ணிக்கையைக் குறைக்க இலங்கை அரசு முடிவு செய்துள் ளது. கடந்த இரண்டு ஆண்டுகளா கவே இலங்கை கடுமையான பொரு ளாதார நெருக்கடியில் சிக்கி திவாலா கியுள்ளது. அந்நியச் செலாவணியே இல்லாததால் அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்ய முடியாமல் திணறிக் கொண்டிருக் கிறது. சர்வதேச நிதி நிறுவனங்க ளோடு பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். பொருளா தாரத்தை மீட்க நிதி தேவை என்ப தோடு, செலவுக் குறைப்பு நடவ டிக்கைகளையும் துவக்கியுள்ளனர். ஏற்கனவே பல்வேறு துறைகளில் செலவினங்கள் குறைக்கப் பட்டுள்ளன.

ராஜபக்சேக்கள் பதவி விலகிய பின்னர் ஜனாதிபதியாகப் பொ றுப்பேற்றுக் கொண்ட ரணில் விக்ரம சிங்கே வரிகளை உயர்த்தியதோடு, புதிய வரிகளையும் விதித்துள்ளார். செலவினக் குறைப்பையும் கடுமை யாக விதித்திருக்கிறார். இந்த இரண் டுமே சர்வதேச நிதி நிறுவனம்(ஐ.எம்.எப்) தரப்போகும் நிதியை  வாங்குவதற்காகவே செய்யப் பட்டுள்ளன. இவற்றை மேற்கொள்ள வேண்டும் என்று ஐ.எம்.எப். நிபந்த னைகளை விதித்திருக்கிறது. அந்த நிபந்தனைகளை எப்படியாவது நிறைவேற்ற வேண்டும் என்று ரணில் விக்ரமசிங்கே முனைந்து நிற்கிறார். ஜூலை 2022ல் பொருளாதார நெருக்கடி முற்றியபோது பெரும் போராட்டம் வெடித்தது. அப்போ தைய ஜனாதிபதி கோத்தபய ராஜ பக்சேயின் அரசு மாளிகைக்குள் போ ராட்டக்காரர்கள் புகுந்தனர். கோத்தபய ராஜபக்சே ராணுவத் தின் உதவியுடன் தப்பித்து ஓட வேண்டி வந்தது. வெளிநாட்டுக்கு தப்பிச் சென்ற அவர், அங்கி ருந்தே தனது பதவி விலகல் கடி தத்தை அனுப்பி வைத்தார். போராட் டமும் தணிந்து புதிய அரசு தனது செயல்பாடுகளை மேற்கொள்ளும் நிலைமை வந்தது. ஆனால், வரிகள் விதிப்பு மற்றும் செலவினக்குறைப்பு மக்களின் வாழ்க்கையில் மேலும் நெருக்கடிகளை ஏற்படுத்தி யுள்ளன.

பணவீக்கம் பெருமளவில் அதி கரித்துள்ளது. அரசுக்குப் போதிய அளவில் வருமானமும் வரவில்லை.  கையில் ரொக்க இருப்பு சரிந்து விட்டது. அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியர்களுக்கும் தர போதிய பணம் இல்லை என்று நிதித்துறை கடந்த வாரத்தில் கைவிரித்தது. கடந்த ஆண்டில் 8.7 விழுக்காடு அள வுக்கு இலங்கை பொருளாதாரம் சரிந்தது. மின்சாரம் இல்லாமல் பல வாரங்கள் காலத்தைக் கழிக்க வேண்டிய கட்டாயம் மக்களுக்கு ஏற்பட்டது. பெட்ரோல் நிரப்பும் நிலையங்களில் நீண்ட வரிசை, பெரும் மளிகைக்கடைகளில் பொ ருட்கள் இன்மை உள்ளிட்டவை அன்றாடக் காட்சிகளாக மாறி விட்டன.

ராணுவச் செலவு

கடந்த ஆண்டில் அரசு மேற் கொண்ட செலவில் 10 விழுக்காடு ராணுவத்திற்கு செய்ததாகும். மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2 விழுக்காடாக இது இருந்தது. 2017 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் இலங்கை ராணுவத்தினரின் எண்ணிக்கை உச்சத்தைத் தொட்டது. 3 லட்சத்து 17 ஆயிரம் வீரர்கள் இருந்ததாக உலக வங்கியின் அறிக்கை தெரி விக்கிறது. இத்தனைக்கும் உள் நாட்டுப் போர் நிறைவு பெற்று பத்து ஆண்டுகள் கழித்து எண் ணிக்கை பெருகியிருக்கிறது. பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க 2024 ஆம் ஆண்டில்  ராணுவ வீரர்களின் எண்ணிக் கையை 1 லட்சத்து 35 ஆயிரம் ஆகக் குறைக்கப் போகிறார்கள். 2030 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை யை ஒரு லட்சமாக ஆக்க முடிவெ டுத்துள்ளனர். இந்தத் தகவலை இலங்கையின் பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் பண்டாரா தென் னகூன் தெரிவித்துள்ளார். செல வுக்குறைப்புக்காக மட்டுமின்றி, வலுவான, உயர்ந்த தொழில்நுட்பம் கொண்ட மற்றும் தந்திரோபாயம் கொண்ட படையாக மாற்றுவதும் இதன் நோக்கம் என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

ராணுவச் செலவு குறைப்பும் ஐ.எம்.எப். நிபந்தனைகளின் அடிப்ப டையில்தான் நடப்பதாக பொரு ளாதார வல்லுநர்கள் கூறியுள்ளனர். ராணுவ ரீதியான பெரிய நாடுகளை நம்பி நிற்கும் நிலை உருவாகும் என்று அவர்கள் எச்சரிக்கிறார்கள்.