கொலம்பியாவில் புலம்பெயர்ந்தோருக்கு சட்ட அங்கீகாரம்
பொகோடா,ஜூன் 19- கொலம்பியா நாட்டில் 5 லட்சத்து 40 ஆயிரம் புலம் பெயர் வெனிசுலா தொழிலாளர்களுக்கு சட்ட அந்தஸ்தை வழங்கும் என்று கொலம்பிய குடியேற்ற அமைச்சகம் அறி வித்துள்ளது. அரசாங்கத் தகவல்படி வெனிசுலாவில் இருந்து புலம் பெயர்ந்து வந்த 28 லட்சத்து க்கும் அதிகமான மக்கள் தற்போது கொலம்பியாவில் வாழ்கின்றனர். தற்போது கொலம்பியாவின் அறிவிப்பின் மூலம் புலம்பெயர் மக்களுக்கு அந்நாட்டின் குடிமக்களைப் போல அனைத்து சட்ட ரீதியிலான உரிமைகளும் கிடைக்கும். மேலும் அந்நாட்டின் சட்டதிட்டங்கள் அடிப்படையிலான பாதுகாப்பையும் பெற முடியும் என கூறப்பட்டுள்ளது.
கடுமையான வெப்பத்தால் மரணமடையும் ஹஜ் பயணிகள்
மெக்கா,ஜூன் 19- ஹஜ் பயணத்தின் போது கிட்டத்தட்ட 550 பயணிகள் மரணமடைந்துள்ளதாக சவூதி அரசு அதிகாரிகள் தெரி வித்துள்ளனர்.மேலும் காலநிலை மாற்றத்தால் உரு வாகியுள்ள வெப்ப அலையே மரணத்திற்கு முக்கிய காரணம் என தெரிவித்துள்ளனர். மரணமடைந்தவர்களில் 323 பேர் எகிப்தியர்கள் என வும், 60 பேர் ஜோர்டான் நாட்டைச் சேர்ந்தவர்கள் என வும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் பெரும்பாலோர் வெப்ப அலைத்தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளனர் எனவும் சவூதி அரேபிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த பய ணத்தின் போதும், தங்குமிடங்களிலும் போதிய உணவு, தண்ணீர், காற்றோட்டம் இல்லாததால் தற்போது வீசிவரும் வெப்ப அலையால் மிக வேகமாக மக்கள் பாதிக்கப்பட்டு உயிரி ழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.