world

img

தீக்கதிர் உலக செய்திகள்

ஐநா நிவாரண அமைப்பிற்கு  நிதியுதவியை தொடர்கிறோம் :  ஆஸ்திரியா 

பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா  நிவா ரண அமைப்பிற்கு நிதி உதவியை மீண்டும் தொடர்வதாக ஆஸ்திரியா தெரிவித்துள்ளது. 2023 ஆம் ஆண்டு இஸ்ரேல் மீதான ஹமாஸ் அமைப்பின் தாக்குதலுக்கு ஐநா அதிகாரிகள் உதவி செய்தார்கள் என இஸ்ரேல் எந்த ஆதார மும் இன்றி சர்வதேச நீதிமன்றத்தில் குற்றம் சாட்டி யதைத் தொடர்ந்து பல நாடுகள் நிதி உதவியை வெட்டின. தற்போது வரை எந்த ஆதாரத்தை யும் இஸ்ரேல் கொடுக்காததால் மீண்டும் அந்த  நாடுகள் நிதி உதவியை துவக்கி வருகின்றன. 

எத்தியோப்பியாவில் சீன உதவியுடன் ராணுவ மருத்துவமனை திறப்பு 

சீனா அரசின் உதவியுடன் எத்தி யோப்பியாவில் ராணுவ மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. ஒரோமியா மாநிலத்தில் கட்டப்பட்டுள்ள அந்த மருத்துவமனையை எத்தியோப்பிய பிரதமர் அபி அகமது திறந்து வைத்துள்ளார். எத்தியோப்பிய மருத்து வக்குழுவினருக்கு உதவும் வகையில் சீன மருத்துவ குழு மருத்துவமனையில் பணியாற்றுவதோடு  மருத்துவ உபகர ணங்கள், மருந்துகள் என சீன அரசு கொடுத்து உதவியுள்ளது.

ஆப்கனில் உயரும்  பலி எண்ணிக்கை 

ஆப்கானிஸ்தானில் நாட்டில் ஏற்பட்ட பெரு மழை - வெள்ளத்தில் பலியானவர்கள் எண் ணிக்கை 120 ஆக உயர்ந்துள்ளது. வெள்ளி மற்றும் சனிக்கிழமை ஏற்பட்ட வெள்ளத்தில் வடக்கு பகுதியில் உள்ள  ஃபாரியா  மற்றும் மேற்கு பகுதி யில் உள்ள  கோர் மாகாணம் ஆகிய பகுதிகள் மிக மோசமான பாதிப்புகளை சந்தித்துள்ளதாக அந்நாட்டு நிர்வாகம் தெரிவித்துள்ளது சனிக்கிழ மை வரை 50 பேர் உயிரிழந்திருந்த நிலையில் பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த எண்ணிக் கை மேலும் உயரலாம் எனவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

8 லட்சம் பாலஸ்தீனர்களை  மீண்டும் துரத்திய இஸ்ரேல்

ரஃபா பகுதியில் இருந்து  8 லட்சம் பாலஸ்தீ னர்களை இஸ்ரேல் ராணுவம் வலுக்கட்டா யமாக துரத்தியுள்ளது. இஸ்ரேல் ராணும் இரண்டு வாரங்களாக பாலஸ்தீனர்களின் இறுதிப் புகலிட மாக உள்ள  ரஃபா நகரின் மீது தரைவழித் தாக்கு தலை நடத்தி வருவதோடு அங்குள்ள 10 லட்சத்து க்கும் அதிகமான மக்களை வெளியேறுமாறு மிரட்டி வந்தது. இந்நிலையில் 8 லட்சம் பாலஸ்தீனர்கள் ரஃபாவை விட்டு வெளியேறியுள்ளனர் என பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா அமைப்பின் பிலிப் லாஸரினி தெரிவித்துள்ளார். 

‘அதிக வரிவிதிப்பால் இந்தியாவுடன் வர்த்தகம் செய்ய முடியவில்லை’

புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ் தான், பொருட்களுக்கு  இந்தியா 200சதவீதம் வரை வரி விதிக்க முடிவெடுத்தது. இவ்வாறு அதிக வரிகள் விதிக்கப்படுவதால் 2019 முதல் இந்தியாவுடனான வர்த்தகம் நிறுத் தப்பட்டுள்ளது  என பாகிஸ்தான் வெளியுற வுத்துறை  அமைச்சரும் துணைப் பிரதமருமான இஷாக் தார் தெரிவித்துள்ளார். மேலும் நாங்கள் இந்தியாவுடன் அமைதியாக வர்த்த கம் செய்ய தொடர்ந்து விரும்புகிறோம் என் றும்  குறிப்பிட்டுள்ளார்.

 

;